கட்டுரைகள் செய்திகள் தமிழகம் தலைப்புச்செய்தி

இது தான் ஜனநாயகமா?”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு!

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.டி.ஜெயராமன் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைதான ஜெயராமன், 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். தனது இயல்பு வாழ்க்கைக்கு மீளும் முன்னமே மீண்டும் வேறொரு வழக்கில் அவர் சிக்கியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியல் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் 42 நாட்கள் கழித்த தருணத்தில் எழுதிய “நதிகள் இணைப்பும், ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா” என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் 22 அன்று புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெறும் 48 பக்கங்களை உள்ளடக்கிய இப்புத்தகம் நூறு பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. அதற்குள், இந்திய இறையாண்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கு எதிரான புத்தகம் என்று அவரை வழக்கில் தள்ளியுள்ளது.

இதனை பற்றி  The News Minute வெளியிட்டுள்ள திரு.ஜெயராமன்: உடனான பேட்டியில் அவர் கருத்து தெரிவித்த போது ::
“விமர்சனத்தை ஏற்க மறுக்கும் மத்திய அரசு, தனது மக்களை மறந்து மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கும் மாநில அரசு, இவர்களுக்கு மத்தியில்  என்னுடைய கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் இல்லை, அரசின் திட்டங்களுக்கு எதிராக எழுத நமக்கு உரிமை  இல்லை எனில் இதனை எப்படி ஜனநாயக நாடு என்று கூற முடியும்”  என்று கூறினார்.

பல வருட ஆலோசனைக்கு பிறகு, சுமார் 87 பில்லியன் டாலர் செலவிலான நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு சவாலாக கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெரும் வெள்ளப்பெருக்குகளையும்  மற்றும் பஞ்சத்தையும் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக நம்புவதாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியான செய்திகளில் பார்க்க முடிகிறது.

ஜெயராமன் மேலும் கூறுகையில்: “இந்த இலட்சியத் திட்டமானது நிறைவேறப்போவதில்லை, நீர்நிலைகளை மக்களிடம் இருந்து பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அரசு செய்யும் மோசடி தான் இது என்பதையே என் புத்தகத்தின் வாதிக்கிறது.” .”நீர்நிலைகள் அனைத்தையும் மக்களிடம் இருந்து பறித்து, கார்ப்பரேட்காரர்களிடமும், பெரிய பெரிய கம்பெனிகளிடம் கொடுத்து இவ்வளவு பெரிய திட்டத்தை முடித்த பின்  அவர்கள் நமக்கு நீரை இலவசமாகத் தருவார்கள் என்று நினைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும், நதிகளை இணைப்பதன் முக்கிய நோக்கம் கப்பல் போக்குவரத்தை எளிதாக்குவதும், எண்ணெய், இயற்கை எரிவாய்வு,, ஹைட்ரொ கார்பன் போன்ற எரிவாய்வுகளை எளிதாக கொண்டு செல்வதுமே ஆகும் என்றார்.

அறிக்கைகளின் அடிப்படையில், கங்கை உட்பட சுமார் 60 நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் விவசாயிகளின் பருவமழை தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என்று அரசு தரப்பு உறுதியாக நம்புகிறது.,

இத்திட்டத்தை சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அபத்தமானது என்றும், இத்திட்டத்தினால்  பல கோடி மக்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயம் மட்டுமின்றி பெரும்பான்மையான நிலங்கள் பயனற்று நதிகளில் மூழ்கவே செய்யும். மேலும் 50 கோடி லட்சம் செலவழித்து இத்திட்டத்தை முடித்த பின் எவ்வாறு இத்தொகையை  மீண்டும் பெற முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த திட்டத்தில் மக்களின் ஆதரவு அரசுக்கு இருப்பது போன்ற மாயையை உருவாக்கவே இஷா அறக்கட்டளை ஜக்கி வாசுதேவ் போன்றோர் பயன்படுத்தப்பட்டுள்ளனர், “நதி இணைப்பிற்கு ஆதரவான மிஸ்டு கால் திட்டங்கள் நமக்கு வேறெதை உணர்த்துகிறது?” என்று குற்றம்ச்சாட்டிய ஜெயக்குமார்,  “அரசுக்கு இது போன்றவர்களின்  ஆதரவு இருப்பது போல, எனக்கும் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும்  மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவு உள்ளது. அவர்கள் இந்த தேசத்துரோக வழக்கை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட எனக்கு உதவுவார்கள்.” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

அரசின் ஒரு திட்டத்தை ஆய்வுப்பூர்வமாக எதிர்த்து எழுதியதற்காகவே   சமூக ஆர்வலர் ஒருவர் மீது தேச விரோத வழக்கு பாய்ந்துள்ளது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது!

தமிழில்: யாஸ்மின் 


One comments on “இது தான் ஜனநாயகமா?”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு!

Comments are closed.