இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

வந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்!

தாகூர் எழுதிய ஜனகன மன மற்றும் அல்லாமா இக்பால் எழுதிய சாரே ஜகான்சே அச்சா ஆகிய இருபாடல்கள் தான் நாட்டின் தேசிய கீதம் மற்றும் ஒற்றுமை கீதமாக உள்ளது. இதில் 1882 ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்தமடம் என்ற நூலின் வந்தே மாத்தரம் என்ற பாடலை பாஜக அரசு தேசிய கீதமாக அறிவிக்க முயன்று வருகிறது.

திரையரங்குகளில் வந்தே மாதரம் பாடலை ஒலிக்க செய்து அதற்கு கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்ற கேலிக்கையான உத்தரவை பிறப்பித்தது. வந்தே மாத்திரம் பாடலை பாடாத அல்லது மரியாதை செலுத்தாதவர்களை தேச விரோதி என்ற அடையாளத்தை அவர்களுக்கு சூட்டியது.

தனியார் தொலைகாட்சியில் நடைபெற்ற விவாதத்தில் முஸ்லிம் தனியார்சட்ட வாரிய உறுப்பினர் முப்தி இஜாஸ் அர்சத் காஷிமி வந்தே மாதரம் பாடலை  பாஜகவின் செய்தி தொடர்பாளர்  நவீன் குமாரை பாடிகாட்ட சொன்னார். ஆனால் நவீன் குமார் பாட மறுத்து விவாதத்தில் கூச்சலிட தொடங்கினார்.

தொடர்ந்து முப்தி அர்சத் காஷிமி வந்தே மாதர பாடலை நவீன் குமார் படவேண்டும் என்று கூற நவீன் குமார் தனது அலைபேசியை எடுத்து பாடலை பார்த்து பாட முற்பட்டார். அலைபேசியில் பாடலின் வரியை பார்த்த வண்ணம் நவீன் குமார் வந்தே மாதரம் பாடலை பாடினார். பாடலில் உள்ள பல வரிகளை பல இடங்களில் தவறு தவறாக பாடினார் நவீன் குமார். பலர் பார்க்கும் விவாத நிகழ்ச்சியில் நவீன் குமார் தவறு தவறாக வந்தே மாதரம் பாடலை பாடியதின் மூலம் சமூக வலைத்தளங்களில் நவீன் குமார் அதிகம் கேலி செய்யபட்டு வருகிறார்.

வந்தே மாதரம் படலை கட்டாயபடுத்த முயலும் பாஜகவினர் பொது நிகழ்ச்சியில் அந்த பாடலை தவறாக பாடுவது இது முதலல்ல இதற்கு முன்பு உ.பி. மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பால்தேவ் சிங் பங்குபெற்ற ஒரு விவாதத்தில் கூட அவரை வந்தே மாதரம் படலை பாட விவாதத்தின் நெறியாளர் கேட்டுகொண்டார். அப்போதும் தவறு தவறாக தான் பால்தேவ் பாடினார்.


One comments on “வந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்!
 1. Nіcely like Μommy mentioned, when we love one another annd
  ⅼove the world that Jesus died for, that?s a type of worship.

  Ꮃhen we hink aЬout God and take heed to the ssermon or in Sunday College, that?s a
  approach of worshipping as ɑ result of we arre stuԁying how nice God is
  and Ꮋe likes that. Or once we sit around ɑnd inform
  ezch other what the best things about God
  are. You understand how much you want listening to people say how smart
  or cute yoᥙ boys are? Effectively God ⅼikes after we talk collectively about how great hhe is.?
  Daddy answerеd.

Comments are closed.