உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

முஃப்தி இஸ்மாயில் மெங்-கிற்கு மற்றும் ஹஸ்லின் பஹாரிம் ஆகிய இஸ்லாமிய பிரச்சாகர்களுக்கு தடை விதிக்க மலேசியா மறுப்பு

சிங்கப்பூர் தடைசெய்துள்ள பிரபல இஸ்லாமிய பிரச்சாகர்களான முஃப்தி  இஸ்மாயில் மெங்க், ஹஸ்லின் பஹாரிம் இருவருக்கும், மலேசியாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கத் திட்டம் ஏதும் இல்லை என்று மலேசியா தெரிவித்துள்ளது.

மலேசிய சட்டத்தை அவர்கள் மீறவில்லை என்பதால், அவர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை என மலேசிய துணைப் பிரதமர் அஹ்மது ஸாஹிட் ஹமீது கூறியதாக, New Straits Times நாளிதழ் தகவல் அளித்தது.

சமூக ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை கொண்டுள்ளதால், அவர்கள் இருவரும் சிங்கப்பூருக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படாது என, சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் கூறியது.

இருப்பினும், அவர்கள் மலேசிய சட்டத்தை இதுவரை மீறவில்லை என்பதால், அவர்களைத் தடை செய்வதற்கு மலேசியாவுக்குத் திட்டம் ஏதும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.