செய்திகள் தமிழகம் தலைப்புச்செய்தி

துபாயை போல சென்னையிலும் விரைவில் Nol ஸ்மார்ட் கார்டு சேவை

ஒரே கார்டில் பேருந்திலும், மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்வதற்கான வசதி சென்னையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3365 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், தினந்தோறும் 42 லட்சம் பேர் பயணிக்கின்றனர். கோயம்பேடு முதல் ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம், திருமங்கலம்-நேரு பூங்கா வரை உள்ள மெட்ரோ ரயிலில் பல ஆயிரம் பயணிகள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், மக்களின் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் ஒரே கார்டில் பேருந்திலும், மெட்ரோ ரயிலிலும் பயணிக்கும் வசதி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலாளருடன் மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தை 6 மாதங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


2 comments on “துபாயை போல சென்னையிலும் விரைவில் Nol ஸ்மார்ட் கார்டு சேவை
  1. Ⲩooᥙ possiƅly can play it anytime you want.? Dafdy answered.?As a result of speaking аbouit how nice God iѕ
    makes him joyful and its woгship. Plаy it befoгe you fall aslеep tonight and hen you get up in the morning and God will be near you ɑall
    daay long.

Comments are closed.