இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக பேசிய முன்னாள் மத்தியமைச்சர் பா.சிதம்பரம்!

கடந்த சனிகிழமையன்று நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் அவர்கள் காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பேசி முடிவு காணப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக மத்தியில் இந்த பேச்சி மிகவும் சர்ச்சையை கிளப்பியது. காங்கிரஸ் கட்சியில் தனி நபருக்கு கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது, ஆனால் அது காங்கிரஸ் கட்சியின் கருத்தாக அமையாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் கூறினார்.

இது குறித்து மும்பை கூட்டத்தில் பேசிய தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காங்கிரஸ் கட்சி தற்போது காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிக்க தொடங்கிருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாகவே எப்பொழுதும் இருக்கும். இதற்கு எதிராக பிரிவினைவாதம் பேசுபவர்களுக்கு பா.சிதம்பரம் ஆதரவளிப்பது மிகவும் மோசமானது என்றார்.

மிகவும் சர்ச்சையாக பார்க்கப்படும் பா.சிதம்பரம் அவர்களின் பேச்சிற்கு விளக்கமளிக்கும் வண்ணம் பா.சிதம்பரம் அவர்கள் பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது தான் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை மதிக்கிறேன். அதேநேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் என்னுடைய நிலைபாடு காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டிற்கு எதிராக கூட இருக்கலாம். காஷ்மீர் பொறுத்தவரையில் நாம் அந்த மாநிலத்தில் நிலவும் பிரச்சனைகளுக்காக அதிகளவில் பொருளாதாரத்தை செலவழித்து வருகிறோம். அதை சரி செய்ய அம்மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒருவேளை பெரும்பான்மை மக்கள் காஷ்மீர் தனி நாடு கோரிக்கையை முன்னிருத்தினால் நாம் அதனை செய்து கொடுக்க வேண்டும்.

காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்தாலும் அதற்கென்று அதிக அதிகாரத்தை நாம் 370 சட்டத்தின் மூலம் நம் வழங்கியுள்ளோம். நியாயமாக காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து செயல்படுவதே சிறந்தது என்று கூறினார்.

பா.சிதம்பரம் அவர்களின் காஷ்மீர் குறித்த பேச்சுக்கள் பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி தொடங்கி பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.