உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி தொழில்நுட்பம்

புதுப்பொலிவுடன் வரவிருக்கும் Outlook மெயில்

உலகின் முதலாவது இணையவழி இலவச ஈமெயில் சேவையான ஹாட்மெயிலை 1997ல் 400 மில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசொப்ட் வாங்கியபின் அதைப் பெரிதாக அப்டேட் பண்ணாமலேயே வைத்திருந்தது. 2000களில் இன்டர்நெட்டுக்கு வந்தவர்கள் அனேகம்பேர் ஹாட்மெயிலில்தான் முதன் முதலாக தங்களது ஈமெயில் கணக்கை துவங்கியிருப்பார்கள்.பிறகு யாகூ மெயிலுக்கு மாறி அங்கிருந்து ஜிமெயிலுக்கு மாறியது. இவ்வளவும் நடந்தபிறகு விழித்துக்கொண்ட மைக்ரோசொப்ட் 2012ல் ஹாட்மெயிலை மீள்வடிவமைத்து அவுட்லுக் (Outlook) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.

இந்த அவுட்லுக்கின் புதிய பதிப்பொன்றை விரைவில் மைக்ரோசொப்ட் வெளியிடவுள்ளது. இதைக் கீழ்வரும் முகவரியில் காணலாம். ஜிமெயிலுக்குப் போட்டியாகப் புதிய அவுட்லுக் மக்களைக் கவருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.