உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

சிரியா உள்நாட்டு போரினால் உணவுப் பஞ்சம் – குழந்தைகள் கடும் பாதிப்பு !

சிரியாவின் டமாஸ்கஸ் நகரை கிளர்ச்சிக்குழுக்களிடம் இருந்து மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

சிரியாவின் அரசாங்கப் படைகள் டமாஸ்கசின் கிழக்கிலுள்ள புறநகர்ப் பகுதியை முற்றுகையிட்டுள்ளன. அங்குள்ள பகுதியில் தற்போது கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளே அதிகம்பா திப்புக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு சத்துக்குறைவு , புரதப்பற்றாக்குறை ஆகியவற்றால் கடும் நோய்தொற்றுகளும் ஏற்ப்பாடுகின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு கவுட்டா பகுதியில் குறைந்தது 1,200 குழந்தைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,500 குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்று UNICEF அமைப்பு தெரிவித்தது.