இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

ஹாதியாவின் தற்போதைய நிலை என்ன? – கேரள மகளிர் ஆணையம் கேள்வி!

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஹாதியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். பின்பு இஸ்லாமிய இளைஞரை திருமணமும் செய்து கொண்டார். இது குறித்து ஹாதியாவின் தந்தை வழக்கு தொடர்ந்ததின் பெயரில் ஹாதியாவின் மதம் மாற்றம் “Love Jihad” என்ற கோணத்தில் உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கபட்டது. நீதிமன்றமும் வழக்கை என்.ஐ.ஏ வை விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது.

மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவின் பெயரில் ஹாதியா தனது தந்தையின் பாதுகாப்பில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து ஹாதியா வீட்டுக்காவலில் அதிகம் துன்புறுத்தல் செய்யப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வந்த நிலையில் நேற்று ஹாதியா தன்னை தனது தந்தை அடிப்பதாகவும், வீட்டின் உள்  நடந்து செல்லும் போது எட்டி உதைப்பதாகவும், இப்படியே நடந்து கொண்டிருந்தாள் நாளையோ அதற்கு மறுநாளோ நான் கொலை செய்யபட்டு விடுவேன் என்னை காப்பாற்றுங்கள் என்று ஹாதியா பேசிய வீடியோ ஒன்று வெளியிடபட்டது.

இந்த வீடியோவின் எதிரொலியாக கேரளாவின் பல சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் மனித உரிமை போராளிகள் என்று பலர் தங்களுடைய கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

தற்போது ஹாதியாவின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நேரில் விசாரித்து அறிக்கையை சமர்பிக்க கேரள மாநில மகளிர் ஆணையம் கோட்டயம் மாவட்ட காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் பெயரில் காவல்துறை ஆய்வாளர் நேரில் சந்தித்து அறிக்கை சமரிபிக்கும் போது மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று பலரால் எதிர்பார்க்கபடுகிறது.