உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபைச் சிறையிலடைக்க அந்நாட்டு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. பனாமா ஆவணங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பாக அவருக்குக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வரும் தமது மனைவியுடன் நவாஸ் ஷரீஃப் தற்போது லண்டனில் வசிக்கிறார். இந்த மாதத் தொடக்கத்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இருந்தபோதும் இதுவரை அவர் நாடு திரும்பவில்லை.

ஜூலை மாதப் பிற்பகுதியில் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷரீஃபைப் பதவியிலிருந்து நீக்கியது.