உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

3D மாதிரியில் வரையப்பட்ட பாதசாரிகள் கடக்குமிடம் – ஐஸ்லாந்தில் புதிய முயற்சி

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள கடலோர நகரம் ஒன்றில் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 3D மாதிரி வடிவங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாதசாரிகள் கடப்பதற்காக சிக்னல் அருகே வரையப்படும் வெள்ளை நிற கோடுகள் (ஜீப்ரா கிராஸிங்) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இவற்றில் வாகனங்கள் வேகத்தை குறைப்பதில் என்பதால் இந்த கோடுகள் 3D வடிவத்தில் வரையப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதசாரிகளுக்கு காற்றில் நடப்பது போன்ற புதுவித அனுபவம் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளுக்கு அதிக கவனத்தை உருவாக்குவதாக ஐஸ்லாந்து நகர சுகாதாரத்துறை அதிகாரி “ரால்ஃப் ட்ரில்லா” பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இதே மாதிரிகளை புது டில்லியில் உள்ள முக்கிய சாலைகளில் கொண்டுவரப்படுவதற்கான முயற்சசிகளை மேற்கொண்டு வருவதாக ஐஸ்லாந்து நாட்டு சாலை வரைபட நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.