உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

பெட்ரோல் இறக்குமதி – டாலரிலிருந்து வெளியேறும் சீனா கேள்விக்குறியாகப்போகும் அமெரிக்க வர்த்தகம்!

உலகின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் மிக முக்கிய நாடான சீனா இனி தன்னுடைய பெட்ரோலியம்  சார்ந்த இறக்குமதிக்கு டாலர் வர்த்தகத்தை பயன்படுத்த போவதில்லை என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்த அந்த செய்தி தொகுப்பில் உலகில் பெட்ரோலியம் தான் அதிகளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் பொருள்.இதை அதிகளவில் இறக்குமதி செய்து வரும் சீனா இனி அதனை டாலர் வர்த்தகத்தின் மூலம் இறக்குமதி செய்யபோவதில்லை என்றும் இனி தனது நாட்டின் பணமத்தின் அடிப்படையில் யுவன் அல்லது தங்கத்திற்கு நிகராகவோ ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய போவதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு டாலர் வர்த்தகம் தான் பயன்பாட்டில் உள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விளையும் டாலரில் தான் நிர்ணயம் செய்யபடுகிறது. இதன் காரணமாக டாலர் உலக நாடுகளின் மிக முக்கிய வர்த்தக மூலமாக இருக்கிறது. இது தங்களுடைய நாட்டிற்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பதனாலும் உலகிள் டாலரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதினாலும் இனி தங்களுடடைய நாடு ஏற்றுமதி இறக்குமதியில் யுவன் மற்றும் தங்கத்தையே பயன்படுத்த இருப்பதாக கூறபட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறிய பொருளாதார நிபுணர்கள் சொந்த நாட்டின் பணமதிப்பில் வர்த்தகத்தை மேற்கொள்வது அந்நாட்டிற்கு மிகவும் சிறந்தது. ஆனால் இந்த விசயத்தில் இது அமெரிக்காவிற்கு மிகவும் ஆபத்து என்று கூறியுள்ளார்.

சீனாவின் இந்த முடிவிற்கு ரஷ்யா,இரான் போன்ற நாடுகளில் இருந்து ஆதரவு வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் முக்கிய ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் செயல்பட்டுவரும் சீன நிறுவனங்களும் இனி இதை பயன்படுத்தினால் இனி அமெரிக்காவின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்படையும்.