இந்தியா கட்டுரைகள் செய்திகள் தலைப்புச்செய்தி

பசு தீவிரவாதத்தின் பலிகள்

இந்தியாவின் மாட்டுக்கறி நிலைப்பாடு குறித்த சுருக்கமான வரலாறு
இந்தியாவின் பல மாநிலங்களில் பசுவதைக்கு எதிரான சட்டம் உள்ளது. மேற்கு வங்கம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே தடை இல்லை. மாநிலக் கொள்கையின் கோட்பாடுகள் இவ்வாறு இருந்தாலும், அதாவது: “நவீன மற்றும் விஞ்ஞான கோட்பாடுகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஏற்பாடு செய்வதற்கு மாநில அரசு முயல்கிறது. மாடுகள், கன்றுகள், கன்று மற்றும் பிற கால்நடை மற்றும் கால்நடை இனங்கள் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும், “,  என்று இருந்தாலும், மாட்டுக்கறி உண்பதற்கு சட்டபூர்வமாக எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, பசு கண்காணிப்பு என்று சிலர் கூட்டமாக கிளம்பி “கவ்ரக்ஷா” அல்லது “பசு பாதுகாப்பு படை” என்ற பெயரில் கால்நடைகளை கொண்டு செல்லும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுபப்து பசு பாதுகாப்பு கொள்கையின் அதி தீவிர நிலையாகும். கடந்த சில ஆண்டுகளாக, இவ்வாறான தாக்குதல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் மிகவும் அதிகரித்துள்ளது.
பஹ்லு கான் க்கு நேர்ந்த கொடூரம்: நடந்தது என்ன?!
55 வயதான பஹ்லு கான் ஹரியானாவில் நூஹ் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பால்தொழில் விவசாயி. கடந்த மார்ச் 31, 2017 அன்று இவர் தன் இரு மகன்கள் இர்ஷாத் , ஆரிஃப் மற்றும் சில விவசாயிகளுடன் ஜெய்பூர் க்கு புறப்பட்டார். தன்னுடைய பால் தொழிலை விரிவாக்க புதிதாக பசுக்களை வாங்குவதற்காக இவர்கள் சென்றார்கள்.இவர்களுடைய கொள்முதல் நியாயமாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டுமே இருந்தது. இவர்களின் வியாபாரம் தொடர்பான ரசீதுகள் அனைத்தும் இவர்களிடம் இருந்தது. அதுமட்டுமல்ல, நகர்ப்புற அதிகாரிகளிடம் இருந்து பால் உற்பத்திக்காகவே இவர்கள் மாடுகள் விற்கிறார்கள் என்ற சான்றிதழும் கூட அவர்கள் பெற்றிருந்தார்கள். ஆனால் இந்த சான்றிதழ்களும் ஆதாரங்களும் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்கவில்லை,
ஆம், ஏப்ரில் 1 அன்று, பஹ்லு கானும் அவருடன் இருந்தவர்களும் தங்கள் கால்நடைகளுடன் தங்களுடைய கிராமத்திற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் வைத்து பசு கண்காணிப்பாளர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்கள். சுமார் 200 கவ் ரக்ஷா குண்டர்கள் அவர்களை இரக்கமின்றி தாக்கினார்கள். பஹ்லு கான் இறைச்சிக்காக பசுக்களை கடத்துவதாக கூறினார்கள். பஹ்லு கான் தன்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் காட்டிய போதும், அவற்றை கண்டுகொள்ளாமல் பஹ்லு கான் ஐயும் அவருடன் இருந்தவர்களையும் அந்த குண்டர்கள் தொடர்ந்து தாக்கினார்கள். அவர்களின் ஒவ்வொரு அடியும் இடியும் மிகவும் இரக்கமற்றதாகவும் கோரத்தனமாகவும் இருந்தது, பஹ்லு கான் எவ்வளவு கெஞ்சிக் கதறிய போதும் அவர்கள் விடவில்லை. இதைவிடக் கொடூரம் என்னவென்றால், இது அனைத்தும் நடந்தது அந்த பகுதி காவல் நிலையத்திலிருந்து 2 கி.மீ அருகில் தான்,
ஏற்கனவே இதய நோயாளியாக இருந்த பஹ்லு கான், அந்த கொடூரமான தாக்குதலால் அடுத்த இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இறந்து போனார். ஆனால் அவர் இறக்கும் முன்பு, தன்னை தாக்கியவர்களில் ஆறு பேர்களின் பெயர்களை போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். பஹ்லு கான் தன்னுடைய வாக்குமூலத்தில் ஓம் யாதவ், சுதிர் யாதவ், ஜக்மல் யாதவ், நவீன் ஷர்மா மற்றும் ராகுல் சைனி ஆகிவர்கள் தன்னை தாக்கியதாக கூறி இருந்தார். இந்த ஆறு பேரும் அரசின் ஆதரவுடன் சுதந்திரமாக இயங்கும் வலது சாரி இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள். பஹ்லு கான் இன் மரணத்திற்கு பிறகு அவரது வாக்குமூலம், மரண வாக்குமூலமாக கருதப்பட்டு உண்மை என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக, பஹ்லு கான் மீதே ராஜஸ்தான் அரசின் பசுவதை தடை சட்டத்தின் [ Rajasthan Bovine Animals (Prohibition of Slaughter and Regulation of Temporary Migration) Act 1995] கீழ் FIR போடப்பட்டது. ஆனால்,  பஹ்லு கான் மீது தாக்குதல் தொடுத்து கொலை செய்தவர்கள் மீது சாதாரண குற்றம் பதியப்பட்டன, பஹ்லு கான் இன் மரண வாக்குமூலம் தெளிவாக இருந்த போதும் வழக்கு தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது. பசு பாதுகாப்பு ஆதரவாளர் சிலரின் போலி சாட்சியங்களுக்கு நன்றி! ஆம், செப்டம்பர் 2017 இல் அந்த ஆறு பேரும் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டனர்.
‘கான்’ களுடன் ஒரு சந்திப்பு: பஹ்லு கான் குடும்பம் சொல்வது என்ன?
பஹ்லு கான் இன்  குடும்பம் ஹரியானாவில் பாரம்பரியமாக கால்நடை விவசாயம் செய்யும் சமூகத்தில் இருந்து வந்தர்வகள். அவர்களின் கிராமம் நூஹ், முன்னர் மீவத் என்று அழைக்கப்பட்டிருந்தது. இது அங்கு வாழ்ந்த பூர்விக இனமான  “மியோ” இனத்தை குறிக்கும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இங்கு வசிக்கிறார்கள். கான் இன் குடும்பம் தங்களுடைய 1 ஏக்கருக்கும் குறைவான விவசாயதிலிருந்து வரும் குறைந்த வருமானத்தை ஈடுகட்ட பால் விற்பனை செய்து வந்தனர். ரம்ஜான் மாதம் வரும்போது தான் மக்கள் அதிகமாக பால் மற்றும் பால் பொருட்களை “செஹ்ரி” செய்வதற்காக வாங்குவார்கள். இதனால், பால் உற்பத்தியை அதிகப்படுத்தி கூடுதல் வருமானம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் கூடுதல் பசுக்களை வாங்க முடிவு செய்திருந்தனர். இன்று, பஹ்லு கான் இன் 80 வயதான பார்வையற்ற தாயார் அங்குரி பேகமும், கானின் மனைவி ஜெபுனா பேகமும், பஹ்லு கான் பலியாக்கப்பட்ட அந்த கொடுந்துயரிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
பஹ்லு கானுடன் அன்று தாக்கப்பட்ட அவரது மகன் ஆரிஃப் பேசும்போது, அந்த குண்டர்கள் கம்பு, இரும்பு ஆயுதங்கள் மாற்று பெல்டைக் கொண்டு தாக்கியதாக சொல்கிறார். பஹ்லு கானின் கண்களிலும் வயிற்றிலும் கடுமையாக குத்தியுள்ளனர். இர்ஷாத் க்கும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அந்த கும்பல் இவர்களின் வாகனத்தை சூறையாடி, அதிலிருந்த பணத்தையும் திருடியுள்ளனர். மாடு வாங்குவதற்காக கடன் வாங்கியத்தில் மீதம் இருந்த பணமாகும் அது. சிலர் அங்கேயே நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். மற்றும் சிலர், தங்களுடைய மொபைல் போன்களில் படமெடுத்தார்கள். போலீஸ் தலையிடாதிருந்திருந்தால் தாங்களும் நிச்சயம் கொல்லப்பட்டிருப்போம் என்கிறார் உயிருக்கு பயந்த ஆரிஃப்.
கடந்த ஏப்ரல் மாதம், டெல்லி ஜந்தர் மாந்தர் முன்பு அமர்ந்தது நீதி கேட்டு போராடியது இந்தக் குடும்பம். ஆனால், அவர்களின் கிராமத்தைச் சார்ந்தவர்கள் இவர்களது பால் தொழிலையே மறு பரிசீலனை செய்ய தலைப்பட்டுவிட்டனர்.
பசுவை நெருங்கியதற்கே பின்னால் இருந்து குறிவைத்துவிடுகிறார்கள்! 
பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே அவதூறு பிரசாரம்
இந்த கொடூர நிகழ்வை அறிந்து ஏற்கனவே இந்தியா முழுவதும் நடந்துவரும் இதுபோன்ற கொடூரங்களுக்கு எதிராக போராடிவரக்கூடிய பல்வேறு சமூக நல அமைப்புகள் கொந்தளித்தன. அனால் மாநில அரசு இந்த கொடூர நிகழ்வைப் பொருட்படுத்தவே இல்லை. எப்படி முஹம்மது அக்லாக் அடித்து கொல்லப்பட்ட போது போலீஸ் குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டாமல், அக்லாக் வைத்திருந்தது ஆட்டுக்கறியா மாட்டுக்காரியா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்களோ அதை போல. பஹ்லு கான் விவகாரத்தில், இன்னும் ஒருபடி மேலே போய், அவர் மீது பல்வேறு அவதூறு பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள். பஹ்லு கான் மாட்டுக்கறி உண்ணும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர், அவர் கால்நடை கடத்தல்காரர், பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவார் என்றெல்லாம் வதந்திகள் வலம் வரத் துவங்கின. பஹ்லு கானுக்கு நடந்த கொடூரம் சரியானது தான் என்றும், அவர் இதற்க்கு தகுதியானவர் தான் என்ற எண்ணத்தைக் கட்டமைக்கவே இவ்வளவும் செய்யப்பட்டன.
ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா , சட்டமன்றத்தில் “பஹ்லு கான் ஒரு கால்நடை கடத்தல் காரர்” என்று சொல்கிறார் , கானின் மகன் இர்ஷாத் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இவாறு அவர் கூறினார். ஆனால் உண்மை என்ன வென்றால், இர்ஷாத் ஏற்கனவே அந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தார், அந்த வழக்குகளும் கவ் ரக்ஷா வினர் போட்ட வழக்குகள் தான்.
கமலா நீதி என்ற பெண் சாத்வி சாமியார், பசு கண்காணிப்பளர்கள் மத்தியில் அந்த பகுதியில் பிரபலமானவர். இவர் சொல்கிறார், பஹ்லு கான் தன் மரண வாக்குமூலத்தில் தவறாக இந்த ஆறு பேர் மீதும் குற்றம் சொல்லியுள்ளாராம். அதுமட்டுமல்ல,  சில சமூக ஆர்வல போராளிகள் கொடுத்த அழுத்தத்தினால் தான் அவர் அப்படி வாக்குமூலம் கொடுத்தார் என்று குற்றம்சாட்டுகிறார். அத்தோடு நிற்கவில்லை, பசு குண்டர்களை பகத் சிங் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுடன் ஒப்பிட்டு பாராட்டவும் செய்கிறார். இது போன்ற அபத்தமான பேச்சுக்கள் தான் பசு குண்டர்கள் மீது மற்றவர்களுக்கு கரிசனயை ஏற்படுத்துகிறது, மட்டுமல்ல,  பஹ்லு கான் போன்றவர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த பசு குண்டர்களை எதோ அவர்களின் மதக் கடமையை செய்வதில் இருந்து தடுப்பது போலவும் காட்டிவிடுகிறது.
இந்த வழக்கை  போலீஸ் சிதைத்தது எப்படி
பஹ்லு கானின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பாக பதிவு செய்யப்படவில்லை, மாறாக, அன்று ஆல்வாரில் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இருந்து போலீசார் முன்னிலையில் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. இந்த வாக்குமூலம் , பஹ்லு கானின் மரண வாக்குமூலமாக ஏற்கப்பட்டிருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் வழக்கு அங்கேயே முடிந்திருக்கும், குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டிருப்பார்கள். ஆனால் குற்றவாளிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே FIR போட்டது போலீஸ்.
பஹ்லு கான் மீது ராஜஸ்தான் மாநில பசுவதை தடை சட்டத்தின் 5 மற்றும் 6 பிரிவுகளின் கீழ் [(Prohibition of Slaughter and Regulation of Temporary Migration) Act 1995] வழக்கு பதிவு செய்யப்பட்டு FIR போடப்பட்டது. ஆனால், போலீஸ் குற்றவாளிகள் மீது குற்றப்பிரிவு 147 (கலவரம் செய்த்தல்), 143 (சட்டப்புறம்பாக கூடுதல்), 323 (தானாக தீங்கு விளைவித்தல்), 308 (கொடூரமான கொலை) மற்றும் 379 (திருட்டு) மீது மட்டும் குற்றம் சுமத்தியது. பஹ்லு கானின் மரணத்திற்கு பிறகு 308 பிரிவு 302 (கொலை) ஆக மாற்றப்பட்டது. இதில் முக்கியமாக எழும் கேள்வி, இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று தெளிவாக தெரிந்த பின்பும், குற்றவாளிகள் மீது குற்றச் சதி (criminal conspiracy) போன்ற கடுமையான பிரிவுகளில் வழக்கு பதியாதது ஏன்?
மேலும், பஹ்லு கானின் மரண வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட ஆறு பேர்களும், சிஐடி விசாரணையில் இந்த ஆறு பேரும், சம்பவம் நடந்த இடத்தில இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதற்காக FIR இருந்து நீக்கப்பட்ட்டன. . இது போக, ராஜஸ்தான் மாநில குற்றப்பிரிவு கூடுதல் பொது ஆணையர் (ADGP, Crime) திரு. பங்கஜ் குமார் சிங், மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில், அந்த ஆறு பேர்களின் மொபைல் போன்களின் லொகேஷன் மற்றும் தாக்குதல் குறித்த வீடியோ ஆகியவற்றை வைத்து விசாரித்ததில்  அந்த ஆறு முக்கிய குற்றவாளிகளும் சம்பவம் நடந்த போது அந்த இடத்திலேயே இல்லை என்று நிரூபணமாகியுள்ளதாக கூறினார். அதன் பிறகு, ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த அந்த ஆறு பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
பசு கண்காணிப்பளர்கள் தொடர்பான வழக்கில் இந்த ஒரு வழக்கு தான் வெளிப்படையாகவே  போலீஸின் செயலற்ற தன்மையால் பூசி மூடப்படும் நிலையில் முடிந்துள்ளது. சிட்டிசன்ஸ் ஒப் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (Citizens for Justice and Peace) இன்னும் சில சமூக ஆர்வல அமைப்புகளுடன், குறிப்பாக, Alliance for Justice and Accountability (AJA), New York, Human Rights Law Network (HRLN), New Delhi, Indian American Muslim Council (IAMC), Washington D.C., Jamia Teachers’ Solidarity Association, New Delhi and South Asian Solidarity Group (SASG), London ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த குற்றவியல் தவறுகளை ஒரு அறிக்கையாக விவரித்துள்ளது, அதன் தலைப்பு  “The Murder of Pahlu Khan By Gau Rakshaks”, அஜித் சாஹி அவர்களின் தனிப்பட்ட விசாரணையை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த அறிக்கை. ஆக்டொபர் 26 அன்று இந்த அறிக்கை புது டெல்லியில் வெளியிடப்படும்.
 மொழியாக்கம்: thetamilwire.blogspot.com

2 comments on “பசு தீவிரவாதத்தின் பலிகள்
 1. Lee and ᒪaгryy cherihed their sixth birthday party. Even tyough they hɑe been twins,
  Mommy aand Daddy always made positive they each had a particular time.

  And with their birthdays coming inn DecemЬer, Mommy and Daddy also alwsays made posiutive
  their birthdays have Ƅeen special desρitе thhe faⅽt that Christmas was rihht аround the corner.
  The social ցtheгing was sօ fun with a ϲlown and cake and songs and fantastic presents from their pals and grandpareents and ᥙncle and aᥙnts.
  It glided by so qսiⅽk however before they knew it,
  everyone hadd gone dwelling and it was time to scrub up and preρare for
  bed.

 2. This is the perfect blog for anybody who hopes to understand this topic.

  You realize a whole lot its almost tough to argue with you (not
  that I really would want to…HaHa). You certainly put a new spin on a topic that’s been written about for decades.
  Wonderful stuff, just great!

Comments are closed.