உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

ரோஹிங்கியா அகதிகளை திருப்பியனுப்ப மியன்மார் மற்றும் பங்களாதேஷ் இடையே ஒப்பந்தம்

மியன்மாரிலிருந்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் நாடி ரோஹிங்கியா மக்கள் செல்வதை தடுத்து நிறுத்த இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

மியன்மார் தலைநகர் நைப்பிடவில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பங்களாதேஷ் சென்ற ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாக சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு அந்த ஒப்பந்தம் வகைசெய்யும்.

ரக்கைன் மாநிலத்தில்இயல்புநிலை திரும்புவதை உறுதிசெய்வதற்கு மியன்மார் சம்மதம் தெரிவித்துள்ளது.

கூடிய விரைவில் ரொஹிஞ்சா மக்கள் பங்காளாதேஷிலிருந்து திரும்புவதும் உறுதிசெய்யப்படும். இருப்பினும் அது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது விவரிக்கப்படவில்லை.

ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து இதுவரை 600-ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனவாத தாக்குதலுக்கு  அஞ்சி ரக்கைன் மாநிலத்திலிருந்து பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர்.