இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த திருவனந்தபுரம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்போடு பாஜக வின் அடக்குமுறைகளை எதிர்த்து உரிமை முழக்க மாநாடு இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 14 இடங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.நேற்றைய தினம் மதுரையிலும்,திருவனந்தபுரத்திலும் மாநாடு துவங்கியது.திருவனந்தபுரத்தில் நேற்று மாலை 3 மணிக்கு பேரணியுடன் மாநாடு துவங்கியது,திருவனந்தபுரம் நேப்பியர் மியூசியம் அருகே பேரணி துவங்கி புத்தரிக்காண்டம் மைதானத்தில் நிறைவடைந்தது.இந்த புத்தரிக்காண்டம் மைதானத்தின் பிரதான மேடையை இதுவரை ஒரு சில இயக்கங்கள்,கட்சிகள் தான் உபயோகித்துள்ளன,அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் நேற்று புத்தரிக்காண்டம் மைதானத்தின் பிரதான மேடையை உபயோகப்படுத்தியது.பேரணி மற்றும் மாநாட்டில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.பேரணி துவங்கியவுடன் திருவனந்தபுரத்தில் போக்குவரத்து கிழக்கு கோட்டை வரை ஸ்தம்பித்தது.புத்தரிக்காண்டம் மைதானம் நிரம்பி மக்கள் வீதிகளில் அமர தொடங்கினர்,திருவனந்தபுரம் வரலாற்றில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது.லட்சக்கணக்கான மக்கள் கூடிய போதும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் எந்தவித சலனமும் இல்லாமல் மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தனர்.பாஸிசத்திற்கு தொடர்ந்து எதிராக செயல்பட்டு வருவதால் மத்திய பாஜக அரசு பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்ய அறிகுறிகள் தெரிந்த நிலையில் மிகப்பெரும் மக்கள் கூட்டத்தை கூட்டி தனது பலத்தை காட்டியிருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்.கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்தில் மதுரையில் நேற்று மாநாடு நடைபெற்றது,மதுரையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாப்புலர் ஃப்ரண்டிற்கான உரிமை முழக்க மாநாட்டில் பங்கேற்றனர்.இன்றும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்டின் உரிமை முழக்க மாநாடு நடைபெற இருக்கிறது.வரும் வாரங்களில் தொடர்ந்து இந்தியா முழுவதும் மாநாடு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது