இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

நிவேதிதா மேனனுக்கு ஆதரவாக 1800க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்து மனு

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் நிவேதிதா மேனன் நிர்வாகத்திற்கு எதிராக தனது எதிர்ப்பை காட்டியதால் அவர் குறிவைக்கப்பட்டார்.அவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் COMPARATIVE POLITICS AND POLITICAL THEORY துறையின் பேராசிரியராக இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள்,ஆய்வாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,சினிமா இயக்குநர்கள் என 1800க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பினர் “நிவேதிதா மேனனை குற்றமசாட்டுவதை நிறுத்துங்கள்” என்ற கையெழுத்து மனுவை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தரிடம் அளித்தனர்

மேலும் இந்த மனுவின் நகல் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கும் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து ஜுடித் புட்லர்,அமேரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து பார்த்த சேட்டர்ஜி ஆகிய இரண்டு பேராசிரியர்கள் தான் இந்த கையெழுத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.

பேராசிரியர் நிவேதிதா மேனனின் பதவிகாலம் முடிய மூன்று மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் சமீபமாக தனது துறை தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார், மேலும் பேராசிரியர் மேனன் தொடர்ந்து வேட்டையாடப்படுவதனால் எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என்று இதில் கையெழுத்திட்டவர்கள் தெரிவித்தனர்.

பேராசிரியர் மேனன் தனது முடிவுகளை குறித்து தெரிவிக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

புதிய ஆசிரியர்கள் நியமனத்தில் தேர்வு கமிட்டியில் குறைபாடு இருந்ததை எதிர்த்ததற்காக பேராசிரியர் மேனன் மீது குற்றம்சாட்டப்பட்டது வெக்கமாக இருக்கிறது.உடனடியாக அவரை பொறுப்பிலிருந்து நீக்கியது அறிவு ஜீவிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்.நடைமுறைகள்,கருத்துக்களை எதிர்ப்பதற்கான கொள்கை சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

பேராசிரியர் மேனன் மாணவர்களை தூண்டிவிட்டதாக 2016ல் நடந்த பல்கலைக்கழக கல்வி அலுவல் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது,ஆனால் இது முற்றிலும் அபாண்டமான குற்றச்சாட்டு என்றும் மேனன் பிரத்யேகமாக குறிவைக்கப்பட்டதற்கு காரணம் அவர் சில பேராசிரியர்களின் நடவடிக்கைகளை கண்டித்ததற்காகவும் தான் என்று கைழுத்திட்டவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் ஆசிரியர்களை அமைதியாக இருக்கவைப்பதற்காக நிர்வாகம் ஒழுக்க நடவடிக்கை எடுப்போம் என்ற ஒரு மிரட்டலை அறிவித்திருக்கின்றனர்.பல்கலைக்கழக நிர்வாக விதிமீறலை குறித்த எந்த ஒரு கேள்வியும் யாரும் கேக்க கூடாது என்பதற்காக இந்த முறையை கையாள்கின்றனர்

பேராசிரியர் மேனன் மீண்டும் தனது துறையின் தலைமை பொறுப்பில் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்,மேலும் அவரது பணிக்காலம் முடியும் வரை அவரது பணியை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் மீதான விசாரனையை திரும்பப்பெற வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்