உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

அமெரிக்காவை உலுக்கிய லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு – ஆயுதப்புழக்கத்திற்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 59 பேர் இறந்தனர். 500க்கும் மேலானோர் காயமடைந்தனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குற்றவாளியான ஸ்டீபன் பேட்டோக், அருகிலுள்ள ஹோட்டலின் 32ஆம் மாடியிலிருந்து, திறந்தவெளி இசை நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தோரை நோக்கிச் துப்பாக்கியால் வெறித்தனமாக சுட்டார்.

அமெரிக்க வரலாற்றில் அதி பயங்கரமான துப்பாக்கிச்சூடாக அது கருதப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தைக் குறைக்கும் கருவிகளை வாங்குவதை எளிமையாக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லாஸ் வேகஸ் நகரில் நடந்த கொடூரத் தாக்குதலைத் தொடரந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட லாஸ் வேகஸ் நகருக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் இன்று செல்லவிருக்கிறார்.

துப்பாக்கி தொடர்பான சட்டம் குறித்த விவாதம் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் கூறியிருந்தார்.