இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

இந்தியாவை காப்பாற்றுவோம் – கண்ஹையா குமார் முழக்கம்!

இந்தியாவை காப்பாற்றுவோம் – இந்தியாவை மாற்றுவோம் என்ற முழக்கத்தோடு அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு இணைந்து தமிழக மாநிலம் கன்னியாகுமரி முதல் பஞ்சாப் மாநில ஹுசைனிவாலா வரை தொடர் பேரணி மேற்கொள்ள உள்ளனர்.

இந்த பேரணி அறிமுகபடுத்தும் வகையில் நேற்று கேரளா மாநிலம் திருச்சூரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றிய அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் கண்ஹையா குமார் “சங்கபரிவார அமைப்புகள் இந்தியாவின் இந்து தர்மத்தை அழித்து வருகினறனர். அவர்களிடம் இருந்து இந்து தர்மத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்று பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய குமார் “முஸ்லிம்களையும் சிறுபான்மை மக்களையும் கொல்வது இந்து தர்மம் கிடையாது. நாட்டின் நடைபெறும் மிக முக்கியமான பிரச்சனைகளில் நாம் கவனம் செலுத்துவதை திசைமாற்ற இன கலவரங்களையும் சண்டைகளையும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் இந்து தர்மத்தின் உண்மையான புனித்ததை கெடுக்கின்றனர்.

நாட்டின் குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக கோவிந்த் என்ற தலித்தை களம் இறக்கியதன் மூலம் அவர்கள் ரோஹித் வெமுலா மரணம், நஜீப் மாயம், தலித்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றிற்காக நடைபெறும் போராட்டங்கள் தடுக்க நினைக்கிறார்கள். இது பிரதமர் மோடியின் அரசியல் வித்தை.

யாரெல்லாம் கோவிந்த்க்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களை எல்லாம் தலித் விரோதிகள் என்று பாஜக அடையாளமிட முயல்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சிதைந்து போய் உள்ளது. பிரதமர் மோடி நாட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாக்கப்படும் என்றார். எங்கே அந்த வேலை வாய்ப்பு?. இதற்கு எதிராக இளைஞர்கள் போராட வேண்டும்” என்றார்.

குமாரை தொடர்ந்து பேசிய சி.பி.எம். கட்சியின் கேரள மாநில செயலாளர் கன்னம் ராஜேந்திரன் “வங்கியின் மேலாளர்கள் விவசாயம் மற்றும் சிறுதொழில் செய்ய கடன் வாங்கிய சாமானியர்களை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர். ஆனால் பெரும் பெரும் முதலாளிகளிடம் இவாறாக நடந்து கொள்வது கிடையாது. கடன் வசூல் செய்வதை விட்டு விட்டு கடன் தள்ளுபடியை செய்கிறது.” என்றார்.

இந்தியாவை காப்பாற்றுவோம் – இந்தியாவை மாற்றுவோம் என்ற முழக்கத்தோடு அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த நீண்ட பேரணி சுமார் 60 நாட்கள் நடைபெறும். இந்த பேரணியில் இந்திய நாட்டை பாஜக மற்றும் சங்கபரிவார அமைப்புகளிடம் இருந்து மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும் என்றனர் பேரணி ஒருங்கிணைப்பாளர்கள்.


12 comments on “இந்தியாவை காப்பாற்றுவோம் – கண்ஹையா குமார் முழக்கம்!
 1. There are, of couгse, some destructive points to freelancіng.One important point is that in caѕe you work as a
  contract ⲣaralegal youu will not be eligible for the
  varieties of benefits that youd have in working for a law firm or
  a ⲣersonal attorney. If yⲟu гeally feel that such “perks”
  as general medical health insurance аnd otheг such ɑdvantages are impⲟrtant, freelancing
  wont offer you these benefits.

 2. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I
  could add to my blog that automatically tweet my newest twitter updates.
  I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe
  you would have some experience with something like this.

  Please let me know if you run into anything. I
  truly enjoy reading your blog and I look forward to your new updates.

Comments are closed.