உலகம் தலைப்புச்செய்தி

துபையின் மிகப்பெரும் வங்கியின் CEO ஆக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்

துபாயின் மிகப் பெரிய வங்கியை இயக்கும் ஒரு நிறுவனத்தில் முதன்  முதலாக எமிரேட்டை சார்ந்த ஒரு பெண் முதன்மை  நிர்வாக அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

எமிரேட்ஸ் என்.பீ.டி குழுமத்தின் துணை  நிறுவனமான Tanfeeth இன் தலைமை நிர்வாக அதிகாரியாக மகம் பஹ்ளூக்கை நியமித்து அறிவித்துள்ளது.

Tanfeeth 2011 ல் தொடங்கப்பட்டது பங்கு அடிப்படையில் செயல்படும் நிறுவனமாக தொடங்கப்பட்டது.இந்த நிறுவனம் வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாட்டு திறன் களை மேம்படுத்துவதை  நோக்கமா கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. நிறுவனத்தின் பெயர் அரபு மொழியில் ” கொடுக்கப்பட வேலையை செய்து முடித்தல் ” என்று பொருள்.

மரியாம் பஹ்ளூக் முன்னர் மனித வளம் மற்றும் மனித வள கூட்டு வணிகத்தின் குழு தலைவராக எமிரேட்ஸ் என்.பி.டி யில் இருந்தார்.

அவரது காலப்பகுதியில், உள்ளூர் மற்றும் சர்வதேச இரு வங்கிகளினதும் ஒருங்கிணைப்பு,கையகப்படுத்துதல் மற்றும்  மனித வள மேலாண்மை கையாமும்  அம்சத்தில் மரியாம் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்தார்.

நிறுவனத்தின் பொருப்பு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்டீவ் தாம்சன் தலைமை செயல் அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த  நிறுவனம் அறிவித்தது.

“மரியாமின் அனுபவமும், வியாபார செயல்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு குழுக்களை ஊக்குவிக்கும் தனித்தன்மை மற்றும்  சமயோஜித புத்தி, Tanfeeth ஐ சிறப்பாக  வழிநடத்துவதற்கு மிகவும் உதவும் ” என்று எமிரேட்ஸ் NBD குழுவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் Tanfeeth தலைவர்  அப்துல்லா குவஸ்ஸிம்  கூறினார்.

மேலும் அவர் கூறும் போது”Tanfeeth நமது குழு நிறுவனங்களில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.  நான் மரியாமின் தலைமை பண்பு மற்றும் நிர்வாக செயல் திறன் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அவரது செயல் திட்டங்கள் நமது குழு நிறுவனங்களின்  அணி சேவை சிறந்த தரம் ஆகியவை மேம்பட்டு தொடர்ந்து எங்கள் வணிக அலகுகள் அதிகரிக்கும் மேலும் இதன் மூலம் நமது துணை இணை நிறுவனங்களும்   சிறந்து விளங்க ஆதரவு வழங்கும் என்று நம்பிக்கை உண்டு என்றும் கூறினார்.

பஹ்ளூக் கூறும்போது: “எமிரேட்ஸ் என்.டி.டி. குழுமத்தின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு Tanfeeth தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இது துணை நிறுவனங்கள் வர்த்தக அலகுகள் மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை உள்ளடக்கியது. குழுவில் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி பதவி வகிக்க போகும் முதல் பெண் என்று நான்  மகிழ்ச்சி அடைகிறேன். யூஏஈ தேசிய விருதை நான் அனுபவித்ததை போல் உணர்கிறேன். அதேபோல் தலைமைத்துவ பாத்திரங்களை எடுக்க என்னைப் போன்ற மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் அறிவுரை வழங்குவதற்கும் கண்டிப்பாக முயற்சிகளை மேற்கொள்வேன். ” என்று அவர் கூறினார்.