உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

பிரான்ஸில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம்!

பிரான்ஸ் மக்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் ஃபேஸ்புக் நிறுவனம் சேகரித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அந்நிறுவனத்துக்கு தகவல் பாதுகாப்பு நிறுவனம் 160,000 டாலர் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து பிரான்ஸின் தகவல் பாதுகாப்பு நிறுவனமான CNIL வெளியிட்டுள்ள அறிக்கையில், பயன்பாட்டாளர்களுக்கு தெரியாமல் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களை சேகரித்ததற்கு தகவல் பாதுகாப்பு மீறல்கள் சட்டபடி 160,000 டாலர் அபராத தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும்.

தங்களின் வியாபாரம் மற்றும் விளம்பரங்களை காண்பிப்பதற்காக பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அதுமட்டுமில்லாமல், இணைய பயனாளர்களின் Browsing நடவடிக்கைகளையும் கண்காணித்து அந்த தகவல்களையும் ஃபேஸ்புக் எடுத்துள்ளதாக CNIL தெரிவித்துள்ளது.

இதனிடையில், அந்த அபராத தண்டனையை ஏற்று கொள்ள முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வருடம் பிரான்ஸ் மக்களின் தகவல்களை அழிக்க மறுத்த கூகுள் நிறுவனத்துக்கு CNIL 100,000 யூரோ அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.