இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி நோக்கத்தில் சிறந்தது

புதிய IIP தொடர் “உற்பத்தி துறையின் மீதான பண மதிப்பிழப்பின் கடுமையான தாக்கத்தை காட்டுகிறது”

புதிய ஐஐபி (IIP) யின் இந்த தரவில் முறைசாரா பிரிவு இல்லை; எனவே அட்டவணையில் காட்டப்படும்  மந்த நிலை ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவின்  (Organised Sector) தரவு மட்டுமே உள்ளது. முறைசாரா துறை (informal Sectors) மிகவும் கடினமாக பாதிக்கப்பட்டிருக்கும்.

2011-12ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட அடிப்படை தொழில்துறை உற்பத்தி (ஐஐபி) தொடரின் புதிய குறியீடானது, கடந்த ஐந்து ஆண்டுகளில் டிசம்பர் – மார்ச் 2016 – 17 காலகட்டத்தில், உற்பத்தி வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும் போது மிக குறைவாக இருக்கிறது.

இந்த மிகப் பெரிய அடிக்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்பது வல்லுனர்கள் கருத்து . புதியதாக எடுக்கப்பட்ட ஐஐபி யின் தரவில் முறைசாரா பிரிவு சேர்க்கப்படவில்லை;
எனவே அட்டவணையில் காட்டப்படும் மந்தநிலை ஒழுங்கமைக்கப்பட்ட (organisied Sector) பிரிவு மட்டுமே உள்ளது. முறைசாரா துறை இதை விட மிகவும் கடினமாக பாதிக்கப்பட்டிருக்கும்.

விளக்கப்படம் பொருளாதாரத்தின் மீதான பண மதிப்பிப்பின் தாக்கத்தை காட்டுகிறது.

உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 2011-2012 லிருந்து தொகுக்கப்படுகிறது. 2016 டிசம்பர் முதல் மார்ச் மாதம் 2017 ஆம் ஆண்டின் தொடர்ச்சியான உற்பத்தி வளர்ச்சியில் உற்பத்தித் துறையில் சராசரி வளர்ச்சி விகிதம் 1.6% ஆக இருந்தது, இது டிசம்பர் 2015-மார்ச் 2016 ல் சராசரியாக 4.9% ஆக இருந்தது. 2014-15 நிதியாண்டின் கடைசி நான்கு மாதங்களில் வளர்ச்சி 3.2% ஆக இருந்தது; 2013-14 ஆம் ஆண்டில் இது 3.7% ஆக இருந்தது, 2012-13 ஆம் ஆண்டில் இது 9.4% ஆக இருந்தது.

சமீபத்திய மாதங்களில் உற்பத்தியை அதிகரிக்காததற்கான காரணம் பண மதிப்பிழப்பு தான் என நாம் ஏன் கற்பனை செய்ய வேண்டும்?

ஏனென்றால், 2016-17 ஆண்டு முழுவதும் மொத்தமாக உற்பத்தியை நம் ஆய்வு செய்தால், தொடர்ச்சியான உற்பத்தி வளர்ச்சி 4.9% ஆக இருந்தது, இது முந்தைய நிதியாண்டில் 3% வளர்ச்சியை விட அதிகமாக இருந்தது. இது FY16 இன் முதல் எட்டு மாதங்களில், FY16 ன் முதல் எட்டு மாதங்களில், எட்டு மாதங்களின் முதல் எட்டு மாதங்களில், சராசரி எட்டு மாத காலத்தில், 6.6% ஆக இருந்தது, இது FY16 உடன் ஒப்பிடுகையில் 2.1% ஆக இருந்தது.

இது நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நிகழ்வினால் ஏற்பட்ட வீழ்ச்சிஆகும், இது 2016-17ல் கடந்த நான்கு மாதங்களில் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், முந்தைய மாதங்களில் கட்டியெழுப்பப்பட்ட வளர்ச்சி வேகமானது அது இந்த பண மதிப்பிழப்பு இடித்து தரைமட்டமாக்கியது எனலாம்.

முறையான உற்பத்தி துறையானது பண மதிப்பிழப்பின் தவறான விளைவுகளிலிருந்து மீட்கப்பட்டதா?

புதிய ஐஐபி எண்கள் இன்னும் அதை காட்டவில்லை-உண்மையில், உற்பத்தி வளர்ச்சி குறைந்து 2017 ஜனவரி மாதம் 3% மேலும் 1.4% பிப்ரவரி மற்றும் இன்னும் 1.2% மார்ச் மாதமாக இப்பதின் மூலம் பணமதிப்பிழப்பின் அதிர்ச்சியிலிருந்து மீழ்வதற்கான முயற்சி மிக மந்தமாகவும் மெதுவாகவும் இப்பது தெரிகிறது.

புதிய தொடரின்படி தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி பழைய எண்ணிக்கையின்கீழ் அதிகமாகவே உள்ளது.

ஆனால்பொருளாதார கட்டமைப்பில் சிறப்பான மாற்றங்களை கைப்பற்றுவதைத் தவற விட்டதற்கான காரணம், 2011-12 ஆம் ஆண்டின் அடிப்படையிலான புதிய மொத்த விலைக் குறியீடு (WPI) பழைய WPI தொடரின் மதிப்பை விட கீழ் இருப்பது பணவீக்கத்தைக் காட்டுகிறது. IIP யின் தரவில் உள்ள பல உள்ளீடுகளின் தர மதிப்பு WPI கைப்பற்றப்பட்டதால் WPI யின் தாக்கம் அதைக் குறைத்திருக்கிறது.

மேலும், பணவாட்டம் குறைவாக இருந்தால், IIP அதிகமாக இருக்கும். புதிய தொடரின் கீழ், எடுக்கப்பட்ட தரவுகள் தரவரிசை மதிப்புகளில் 109 உருப்படிகள், பழைய வரிசையின் கீழ் 54 உருப்படிகளுக்கும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்செயலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சில பிரிவுகளில், WPI ஐப் பயன்படுத்தி குறைக்கப்படுகிறது. குறைந்த WPI உடன், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியும், பழைய தொடரின்போது இருந்ததை விட அதிகமாக இருக்க வேண்டும்.

தமிழாக்கம்: கோவை அசாருதீன்
மூலம்: LIVEMINT