இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

80 மாணவிகளின் கல்வியை கேள்விகுறியாக்கிய காமுகர்கள்!

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பாலியல் தொல்லை காரணமாக ஒரு கிராமத்தில் மட்டும் 80 மாணவிகள் பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஹரியானாவில் உள்ள கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு செல்வதை நிறுத்தி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.11,12 ஆம் வகுப்பி மாணவிகள் தங்கள் வீட்டிலிருந்து 3கிலோ மீட்டர் தொலைவில் கான்வாலியில் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்கிறார்கள். இவர்கள் செல்லும் போது வழியில் இவர்களுக்கு பாலியல் தொல்லைகள் நடந்திருக்கிறது.

இது தொடர்பாக உள்ளூர் தலைவரிடம் மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதனை அவர் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் குறித்த புகாரால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

உண்ணாவிரதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மாணவிகள் பள்ளி செல்லும் வேளையில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார் என கூறும் சமூக ஆர்வலர்கள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வரும் ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார்கள், இதனால் மாணவிகள் அச்சம் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதே ரேவாரி மாவட்டத்தில் கடந்த வருடம் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு கிராமங்களின் மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.