உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரயிலின் இனவாத கொள்ககைகள்

ஸ்தான்புல் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனைகள் பற்றி பேசுகையில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய கொள்கைகள் ஆரம்ப கால அமெரிக்காவின் இனவெறி கொள்கையையும் தென்ஆப்ரிக்காவின் நிறவெறி கொள்கையையும் ஒத்திருப்பதாக கூறினார்.

இஸ்ரேயில் அரசின் இனவெறி மற்றும் சார்புதன்மையுடைய அரசியல் கொள்கைகளுக்கும் அமெரிக்காவின் கருப்பு நிற மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார் .அது தென் ஆப்ரிக்காவில் சிறிது காலங்களுக்கு முன் வரை பின்பற்ற பட்ட இன வெறியை ஒத்ததாகவும் உள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் அமெரிக்கா தனது தூதரகத்தை டெல் அவிவ்ல் இருந்து ஜெருசலம்க்கு மாற்றுவதான முடிவு மிகவும் தவறானதாகும் இம்முயற்ச்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
காஸா நகரத்தின் மீதான இஸ்ரேயிலின் பொருளாதார தடையானது மனித தன்மையற்ற செயல் எனவும் சாடினார்.இஸ்ரேலிய அரசாங்கத்தின் சட்ட குழுவான ‘கேநேச்செட்’மூலம் இஸ்லாமிய அழைப்பு ஒலியின் மீது கட்டுப்பாடு கொண்டுவர முயற்சிக்கும் முயற்ச்சியையும் சாடினார். இந்த சட்ட திருத்தமானது இரவு பதினொரு மணியில் இருந்து காலை ஏழு மணி வரை தொழுகைக்காக ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யும்.இஸ்ரேலிய அமைச்சர்கள், அரபி மொழியை அரசு மொழியிலிருந்து நீக்கும் ,விவாதத்திற்கு உரிய சட்ட திருத்தம் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.மேலும் இந்த சட்டமானது
இஸ்ரேயிலை யூத மக்களுக்கான தேசமாகவும் பிரகடனப்படுத்தும்.
இஸ்ரேயிலின் இத்தகைய முன்னெடுப்புகளை சாடியே ஜனாதிபதி எர்டோகன் இவ்வாறன மேற்சொன்ன கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் பல சந்தர்ப்பங்களில் இஸ்ரேயிலின் பாலஸ்தீனத்தின் மீதான கொள்கைகளை சாடியுள்ளார்.கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இஸ்ரேலிய தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் இஸ்ரேயிலின் காஸா நகரத்தின் மீதான அடக்கு முறையை நாஸிகளின் தலைவர் அடோல்ப் ஹிட்லரின் செயல்களோடு ஒப்பிட்டு கூறினார்.’நான் ஹிட்லர் செய்ததை சரி என்றும் சொல்ல மாட்டேன் அது போல் காஸா நகரத்தில் இஸ்ரேயில் செயல் படுத்தும் அடக்கு முறைகளையும் சரி என்று சொல்ல மாட்டேன்’ என தனது நிலைப்பாட்டை தெளிவாக்கினார்.
2014ம் ஆண்டு இஸ்ரேயில் ராணுவத்தினர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கடலோரப்பகுதியில் தாக்குதல் நடத்திய பொழுதும் இவ்வாறே இஸ்ரேயிலின் இனஒழிப்பு நடவடிக்கைகள் நாசி படைகளின் கொடுமைகளை விட கொடூரமானது என குற்றம் சாட்டினார்.

எர்டோகனின் தற்போதைய குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இஸ்ரேயில் அவரை மனித உரிமை மீறல் செய்பவர் என கூறி பதில் தாக்குதல் தொடுத்துள்ளது.இஸ்ரேயிலின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இம்மனுவேல் நஹ்ஷோன் தனது அறிக்கையில் ‘தொடர்ந்து தன்னுடைய நாட்டில் மனித உரிமை மீறல் செய்யவர்க்கு பிராந்தியத்தின் உண்மையான குடியரசான எங்களுக்கு பாடம் எடுப்பதற்கு எந்த தகுதியும் இல்லை ‘ என்று எர்டோகன் பற்றி கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேயில் யூத கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு சுதந்திரத்தை பாதுகாத்து வருவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலம்: அல்ஜசீரா
Barvin Banu Anas.