உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

டொனால்ட் டிரம்ப் பிலிப்பைன்ஸ் பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பிலிப்பைன்ஸ் பயணத்தை
உறுதிசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேப்லர் (Rappler) செய்தி நிறுவன இணையத்தளம் இதனை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய உச்சி மாநாட்டில் டிரம்ப்
கலந்துகொள்வார் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரீகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte), அதிபர்
டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற்றதற்குத் தொலைபேசியில் வாழ்த்துத்
தெரிவித்தபோது இந்த பயணம் உறுதி செய்யப்பட்டதாக அந்த அதிகாரி
குறிப்பிட்டார்.

தகவல் உறுதியானால், இரு நாட்டு உறவு சீரடைந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபரின் பிலிப்பைன்ஸ் பயணம் இடம்பெறும். போதைப்பொருளுக்கு எதிரான திரு.டுடார்ட்டேயின் தீவிரமான நடவடிக்கைகளை டிரம்ப் பாராட்டியதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவு சீரடையத் தொடங்கியது.

ஆனால் அதற்கு முன்னர், அமெரிக்காவை நம்பகத்தன்மையற்ற நாடு என்றும் ஒபாமாவையும் அமெரிக்காவையும் பல்வேறு சந்தர்ப்பத்தில் பிலிப்பைன்ஸ் அதிபர் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.