உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

அமெரிக்காவில் 14 -வயது மாணவியை ஹிஜாபை அவிழ்த்து “தீவிரவாதி” என்று தாக்குதல்!..

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் 14-வயது முஸ்லிம் மாணவியின் ஆடையை பிடித்து இழுத்து “தீவிரவாதி” என்று மிரட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனது நண்பர்களுடன் “லிட்டில் இட்டாலி” எனும் பகுதியில் இரவும் 9 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து The Atlanta Journal-Constitution எனும் பத்திரிக்கை
தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டதை அடுத்து குற்றத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருவதாக  ‘தன்வூடி (Dunwoody)” பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்  தன்வூடி (Dunwoody) குடியிருப்பு பல்வேறு சமூகங்கள் வசிக்கக்கூடிய சமத்துவமான இடம் என்றும் அதில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கது என்றும் காவல்துறை அதிகாரி பில்லி குரோகன்(Billy Grogan) தெரிவித்தார்.

காவல்துறை இந்த சம்பவத்தை இனவெறி தாக்குதல் முயற்சி என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதுகுறித்து அங்கு செயல்படும் முஸ்லிம் அமைப்பான The Georgia chapter of
the Council on American-Islamic Relations (CAIR) வெளியிட்டுள்ள செய்தியில் சம்பவத்தில்  ஈடுபட்ட குற்றவாளியை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மாணவின் குடும்பத்தினர்
அதிர்ச்சியடைந்திருப்பதாக அந்த அமைப்பின் நிர்வாகி எட்வார்ட் அஹமது மிச்சேல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகள் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் குற்றவாளி தானே முன்வந்து மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் அவர்களை மன்னிக்க விரும்புவதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


One comments on “அமெரிக்காவில் 14 -வயது மாணவியை ஹிஜாபை அவிழ்த்து “தீவிரவாதி” என்று தாக்குதல்!..
  1. I see your website needs some unique & fresh articles.
    Writing manually is time consuming, but there is solution for this hard task.
    Just search for: Miftolo’s tools rewriter

Comments are closed.