இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு அதிரடி உத்தரவு!

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ நீதிமன்றம் அத்வானியை முன்னதாக விடுவத்ததை தொடர்ந்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மேலும் அம்மனுவில் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி உள்பட 13 பேர் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகவும் லக்னோ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் , அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டுமென சிபிஐக்கு உத்தரவிட்டதுடன் இவ்வழக்கில் இருந்து கல்யாண் சிங் விடுவிக்கப்படுவதாகவும், மேலும் இந்த வழக்கை தினமும் நடத்தி இரண்டு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.