உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

துருக்கியில் ஜனாதிபதி ஆட்சிமுறை!

துருக்கியில் பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு பதிலாக ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டுவந்து நாடாளுமன்ற அமைப்பில் அதிபரின் அதிகாரத்தை  அதிகரிக்கும் வகையில் துருக்கிய அதிபர் எர்துவானின் ஏகேபி கட்சி திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ஜனநாயக அடிப்பைடியில் பொது வாக்கெடுப்பு 16/04/2017 அன்று நடத்தப்பட்டது. இதில் 5 கோடியே 50 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.

மொத்தம் 99.45 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஜனாதிபதி ஆட்சி முறைக்கு 51.37 சதவீதம் பேரும், பாராளுமன்ற ஆட்சி முறைக்கு 48.63 சதவீதம் பேரும் வாக்களித்து இருந்தனர்.

இதன் மூலம் துருக்கியில் ஜனாதிபதி ஆட்சிமுறை அதிக அளவில் கை கூடியுள்ளது.

நாடாளுமன்ற அமைப்பில், நிர்வாக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இடம்பெறுவது, நாட்டை நவீனப்படுத்தும் என எர்துவானின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் துருக்கியில் பாராளுமன்ற ஜனநாயக முறை அமலில் இருந்த நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் உருவான ராணுவ புரட்சியை அதிபர் ரஜப் தய்யிப் எர்துவான் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.