இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

பசுக்களின் பெயரால் தீவிரவாதம் செய்யும் இயக்கங்களை தடையை செய்ய வேண்டும் – சுவாமி அக்னிவேஷ்

இயற்கை சமூக ஆர்வலரும், ஆன்மீகவாதியுமான சுவாமி அக்னிவேஷ்
நேற்று ஜெய்ப்பூரில் கண்டன போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார், அப்பொழுது பசுக்களின் பெயரால் மக்களை வன்முறையின் பக்கம் தூண்டுபவர்களை தீவிரவாதிகள் என்றும் அவர்களை தீவிரவாத ஒழிப்பு சட்டங்களின் கீழ் கைது செய்து ஒடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டில் தீவிரவாதிகளுக்கு என்ன சட்டங்கள் பயன்படுத்தப்படுமோ அதே
சட்டங்களை பசுக்களின் பெயரால் தீவிரவாதத்தை தூண்டுவோருக்கும் பயன்படுத்த வேண்டும் என அவர் அங்கு கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றினார்.

பல்வேறு மக்கள் நல இயக்கங்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆழ்வார் பகுதியில் அடித்து கொலை செய்யப்பட பெஹ்லு கான் என்ற 55 -வயது முதியவருக்கு நீதி வேண்டி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மாடுகளை விற்பவர்களை விட்டுட்டு , அதை வாங்கிச்செல்பவர்களை கொலை செய்வதன் பின்னால் உள்ள “மாட்டு அரசியலை” ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பெஹ்லு கான் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கான எல்லா செயல்பாடுகளுக்கும் தான் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருமதி கவிதா ஸ்ரீவஸ்தவா (PUCL), முஸ்லீம் தனியார்
சட்டவாரிய உறுப்பினர் நிஷாத் ஹுசைன் , யாஸ்மின் பரூக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களுடைய கோரிக்கை தீர்மானத்தை முதலமைச்சரிடம் சேர்க்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தில் சமர்ப்பித்தனர்.