உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

சிரியா குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் துபாய் அரசு!

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில ஆண்டுகளாக சிரியா நாட்டு அகதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, உடை போன்றவற்றை மக்களிடம் இருந்து சேகரித்து அங்குள்ள அகதிகளுக்கு கொடுத்து வந்தது. இந்நிலையில் அகதிகளாக மீட்கப்பட்ட சிரியா குழந்தைகளுக்கு கல்வி வழங்க அந்நாட்டின் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

துபாயில் தஞ்சம் வந்துள்ள பல நூறு குழந்தைகளை வைத்து ஓர் ஆய்வை அந்நிறுவனம் நடத்தியது. அதில் அதிகமான குழந்தைகள் எழுதவோ படிக்கவோ தெரியாத நிலையில் உள்ளனர். அங்கு நடைப்பெற்ற போரினால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் அப்பொழுது விளங்கியது.

இதனை போக்க அவர்களுக்கு இலவசமாக கல்வி கொடுக்க அஜ்மானைச் சார்ந்த அந்நிறுவனம் முன்வந்தது. இதனால் நூற்றுக்கணக்கான சிரியா குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*