இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

அதிக முதலீட்டில் தயாராகும் மஹாபரதம்!

இந்து மத நம்பிக்கையில் மஹாபரதம் என்ற புராண கதை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இது பற்றி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ள நிலையில் மீண்டும் மஹாபாரத கதையை மையமாக வைத்து மிக பிரமாண்டமான பொருட் செலவில் ஸ்ரீ குமார் மேனன் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

வாசுதேவ் நாயர் எழுதிய ரண்ட மோளம் என்ற நாவலை ஒட்டிய மஹாபாரத கதையை தான் இயக்குனர் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

புராண கதை என்பதினால் மிக பெரிய தொழில் நுட்பங்களும், ஒப்பனைகளும் பயன்படுத்தப்படும் இதற்கு பல கோடி ரூபாய் செலவு ஆகும், எனவே இதனை தயாரிக்க பெரும்பாலனோர் முன்வரவில்லை. இவ்வளவு பெரிய பட்ஜெட்டை கொண்ட இப்படத்தை தயாரிக்க ஐக்கிய அமீரக அரபு நாட்டில் செயல்பட்டு வரும் என்.எம்.சி.குழுமத்தின் தலைவர் பி.ஆர்.செட்டி ஒப்புக்கொண்டுள்ளார்.

பி.ஆர்.செட்டி துபாயில் யு.ஏ.இ.எக்சேஞ்ச் மற்றும் என்.எம்.சி  மருத்துவமனை என்று பல தொழில் செய்துவருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் “ வணிக ரீதியில் இதனை பார்க்காமல் இந்திய சினிமாவின் கெளரவம் என்று பார்க்கிறேன். இது உலகின் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்படும் என்று கூறினார்.

இயக்குனர் மேனன் பேசுகையில் வரும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் படபிடிப்பு தொடங்கி 2020க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் பீமா கதாபாத்திரத்திற்கு மோகன்லால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.மேலும் படம் உலகளவில் அதிக கவனத்தை ஈர்க்கும் என்று நன்புகிறேன் “ என்றார்.