இந்தியா கட்டுரைகள் தலைப்புச்செய்தி பொது கட்டுரைகள்

தெலுங்கானாவை குறி வைக்க பாஜக போட்ட மாஸ்டர் பிளான்!

உத்திரபிரதேசம், ஜார்கண்ட், கோவா வெற்றியை தொடர்ந்து பாஜக புதிய உத்வேகத்தோடு நடக்கவிருக்கும் பல மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள புதிய புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

உத்திரபிரதேசத்தில் முஸ்லிம்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் வாக்கு வங்கியாக பார்க்கபட்ட நிலையில், பாஜக முஸ்லிம்கள் வாக்குகளை சிதற செய்து இருக்கக்கூடிய இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற வேண்டும் என்ற மாஸ்டர் பிளானை உருவாக்கியது. பின் அது வெற்றி பெற அதனை தெலுங்கான மாநில சட்டமன்ற தேர்தலிலும் செயல்படுத்த பாஜக வட்டாரம் முடிவெடுத்துள்ளது.

இதற்கு அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றுதான் ஒவைசி தலைமையிலான எம்.ஐ.எம்.கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். காரணம் மகாராஷ்டிரம், உத்திரபிரதேசத்தில் முஸ்லிம்கள் வாக்கு அதிகம் உள்ள தொகுதியில் பாஜக வழக்கம் போல் முஸ்லிம்களின் வாக்குகளை மையப்படுத்தவில்லை. மாறாக முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தை செய்து இந்துக்களின் வாக்குகளை கவர முயன்றனர். முஸ்லிம் இட ஒதுக்கீடு, பாப்ரி மஸ்ஜித் போன்ற விவகாரங்களை மையமாக வைத்து அரசியல் செய்தனர். மேலும் முஸ்லிம்களின் வாக்குகளும் ஒவ்வொரு கட்சிகளுக்கு பிரிந்து பாஜக வின் வெற்றிக்கு அது வழிவகுத்தது.

இதை தெலுங்கானவிலும் செயல்படுத்த பாஜக அதன் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஆயத்தம் செய்து வருகிறது. இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட இருக்கும் எம்.ஐ.எம் கட்சி இது குறித்து மறுபரிசிலனை செய்து பாஜகவை தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அரசியல் வட்டரங்களும் ஆளும் கட்சியினரும் பேசி வருகின்றனர்.