கட்டுரைகள் முன்னையவை விளம்பரங்கள்

டிசம்பர்-10 – வாசகர் கட்டுரை

பறந்து விரிந்த இந்திய தேசம். பல மொழிகளாலும், பல ஜாதிகளாலும், பழ நிறங்களாலும் பிண்ணி பிணைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட இந்திய தேசம் ஆங்கிலேயே ஆதிக்கத்தில் இறுதி விடுதலை அடைந்த நாள் 1947 ஆகஸ்ட் 15 ஓர் நடு இரவில். நடு இரவில் கிடைத்தாலோ என்னவோ நம் தேசம் இன்னும் இருட்டாகவே கிடக்கின்றது.

நாம் சுதந்திரத்தை பற்றி நினைவு கூறும் போது ஏன் தலைப்பு ‘டிசம்பர்-10’ ஆக இருக்க வேண்டும். ஏனென்றால் சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டே அதவாது 1948 டிசம்பர்-10 அன்று இந்திய அரசாங்கத்தால் மனித உரிமை தினம் என்று ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டதெல்லாம் சரிதான். ஆனால் இந்த தினத்தை நினைவு கூறும் வேளையில் நாம் மனித உரிமை மீறலை பற்றி சற்று சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

நம் நாட்டில் எதெதற்கோ தேதிகள் குறிக்கப்பட்டு அந்த நாளை நாம் நினைத்து ஏதாவது செய்கின்றோம். உதாரணத்திற்கு ஜனவரி 30 அன்று தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தி ஜி அவர்களின் நினைவு நாள், அந்த தினத்தை நினைவு கூறும் அதே வேளையில் அவர் எப்படி இந்த நாட்டை விட்டு பிரிந்தார் என்றும் நினைவு கூறுகிறோமா என்று பார்த்தால் அது கிடையாது. ஏன் சுந்தந்திர தினம் அன்று கூட இந்தியா முழுவதிலும் அவரை நினைவு கூறும் விதமாக நமது நாட்டின் தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதம் எல்லாம் பாடுகின்றோம். ஆனால் இன்று எத்தனை பள்ளி கூடங்களில் பயிலக் கூடிய வருங்கால இந்தியா இவர்களின் கையில் என்று சொல்லக் கூடிய மாணவ மாணவியர்களுக்கு இவர் இறந்த வரலாற்றை கூறுகின்றார்கள். அவரை கொன்ற நாதுராம் கோட்சேவை பற்றியும் அவர் இருந்த கொள்கையும் அந்த கொள்கையை அப்படியே அச்சு பிசராமல் செயல்படுத்தி வருகின்ற கூட்டத்தையும் நினைவில் கொள்வதே கிடையாது.

அதே வேளையில் இந்தியாவில் இன்று சிறுபான்மையினர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

நமது மகாகவி பாரதி கூட சொன்னார்.. “ஜாதிகள் இல்லையடி பாப்பா”. ஆனால் இன்று ஜாதியின் பெயரால் இந்தியாவிலும் தமிழகத்திலும் தென் மாவட்டங்களிலும் நடக்க கூடிய கலவரங்கள், இந்த கலவரத்தை எதிர்த்து ஜனநாயக முறைப்படி போராடினால் நமது காவல் துறையோ என்கவுண்டர் என்ற பெயரில் காக்கை, குருவியை சுடுவது போல் மனிதர்களை சுட்டுத் தள்ளுகிறார்கள். அதே வேலையில முஸ்லிம்கள் என்றால் ஒரு படி மேலே சென்று  தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு ஒரு புறம் இருக்க, செய்திதாள்களையும், தொலைக்காட்சி சேனல்களையும் திறந்தாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை இன்னும் எவ்வளவு குற்றங்கள் இருக்கின்றதோ அத்தனையும் சகஜமாகிவிட்டன. கேட்டால்  சொல்கிறார்கள், நாகரீக உலகம் என்று. சரி நாகரீகம் தெரியாதவர்கள தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், நாகரீகத்தை போதிக்கின்றவர்களே சில நேரங்களில் எல்லை மீறும் போது இவர்களை என்ன சொல்வது.

இந்தியாவில் கடுமையான சட்டங்கள் இருந்தும் என்ன பலன். அப்பாவிகள் தான் விசாரணை எனபதன் பெயரால் காலத்திற்கும் வாழ்க்கையை சிறைச்சாலையிலேயே கழிக்கக் கூடிய சூழ் நிலை. சமீபத்தில் (TATA INSTITUTE OF SOCIAL SCIENCE) சொன்ன தகவலின் படி மும்பை ஆர்தர் சிறைச்சாலையில் 96% பேர் முஸ்லிம்கள் என்றும், இவர்கள் மேல் எந்த ஒரு கடுமையான குற்றமும் இல்லை என்றும் அதே நேரத்த்ஹில் இவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால் தானே தவிர வேறு ஏதும் காரணம் கிடையாது என்கிறது அந்த அமைப்பு.

ஆக இந்த ஆழங்களை எல்லாம் கலைய வேண்டும் என்றால் மனித உரிமை தினம் வரும் போது அதை நினைத்தால் மட்டும் போதாது. மனித உரிமைகள் மீறப்படும் போது அது யாராக இருந்தாலும் சரி நீதிமன்றத்தின் வாயிலாக சரியான தண்டனை புகட்ட வேண்டும்.

மனித உரிமையும்  – இஸ்லாமும்:-
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இது போல் அநியாயங்களுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. ஆனால் எமது நபி அவர்களோ சத்தியத்தை போதித்து அசத்தியத்தை அழித்தார்கள். ஓர் மனிதன் எப்படி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார்கள்.

அவ்வளவு ஏன் அமெரிக்காவை சேர்ந்த ஓர் எழுத்தாளர் மால்கம் H  ஹார்ட் அவர் எழுதிய உலகில் சிறந்த 100 தலைவர்கள் குறித்த நூலில்  முதல் இடம் எமது முகமது நபி(ஸல்) அவர்களுக்குத் தான். அதே வேளையில் மனித உரிமை மீறலை பற்றி நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் ஹுதா என்ற மாநாட்டில் பிரகடனம் படுத்தியதை பாருங்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியது இரண்டு கடமைகள்:-
அவை முதலாவதாக மனிதன் தன்னை படைத்த இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமை. இரண்டாவதாக ஓர் மனிதன் சக மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமை. அவை.

1.ஊர் சொத்து, மானம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.
2.மனித உரிமையை மீறும் அனைத்து செயல்களையும் தவிர்த்தல் வேண்டும்.
3.பகைமை கூடாது.
4.வட்டியும் அதை சார்ந்த பொருளாதார நிலை உருவாக்குவதை தவிர்த்தல் வேண்டும்
5.பெண்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுத்தல் வேண்டும்.

இதை தான் இன்றைய ஆட்சியாளர்கள் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் அது வெறும் காற்று போன பந்தாகத்தான் இருக்கின்றது. ஆக இதிலிருந்து நமது ஆட்சியாளர்களுக்கும் இன்றும் இஸ்லாத்தை தப்பாக விளங்கி வைத்து கொண்டிருப்பவர்களுக்கும் ஓர் தெளிவு கிடைத்திருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றேன்…

சேக் தாவூத்


2 comments on “டிசம்பர்-10 – வாசகர் கட்டுரை

Comments are closed.