You are here
Home > Uncategorized > ஐந்து பெண் குழந்தைகளை பெற்ற மனைவியை மூச்சுத் திணறடித்து கொலைச்செய்த கொடுமைக்கார கணவன்!

ஐந்து பெண் குழந்தைகளை பெற்ற மனைவியை மூச்சுத் திணறடித்து கொலைச்செய்த கொடுமைக்கார கணவன்!

பரேலி:உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பாரத்பூர் என்ற இடத்தில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்ற மனைவியை அவரது கணவன் மூச்சுத் திணறடித்தும் அடித்தும் கொலைச் செய்துள்ளான். ஆண் குழந்தையை பெறாததால் தனது மனைவி சல்மாவை ஆரிஃப் என்ற அவரது கணவன் கொலைச் செய்ததாக போலீஸ் கூறுகிறது. ஆரிஃபை போலீஸ் வழக்குப் பதிவுச் செய்து தேடி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு வந்த ஆரிஃப், தனது மனனவியுடன் தகராறில் ஈடுபட்டு பின்னர் கொலைச் செய்துள்ளான்.

மூத்த பெண்ணிற்கு 13 வயதாகிறது. கடைசிக் குழந்தைக்கு 3 வயதாகிறது. கடந்த பல வருடங்களாக ஆரிஃப், தனது மனைவியை கொடுமைச் செய்வதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் அவர்களது மாமாவின் கண்காணிப்பில் உள்ளன.

Leave a Reply

Top