You are here
Home > Uncategorized > 4-ஆம் வகுப்பு மாணவிகளை ஆடைகளை களைந்து பரிசோதனை – ஆசிரியர்கள் மீது வழக்கு!

4-ஆம் வகுப்பு மாணவிகளை ஆடைகளை களைந்து பரிசோதனை – ஆசிரியர்கள் மீது வழக்கு!

திருரங்காடி(கேரளா):4-ஆம் வகுப்பு மாணவிகளை ஆடைகளை களைந்து பரிசோதனை நடத்திய ஆசிரியர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது. கேரளா மாநிலம் திருரங்காடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வகுப்பில் 70 ரூபாய் காணாமல் போனதாக கூறிய புகாரை விசாரிப்பதற்கு நல்லொழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு புத்தி கெட்டுப்போய் மாணவிகளின் ஆடைகளை களைந்து பரிசோதனையை நடத்தியுள்ளனர். இச்சம்பம் கடந்த 25-ஆம் தேதி நடந்துள்ளது.

இதுத்தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்துள்ளது.

Leave a Reply

Top