You are here
Home > Uncategorized > அஸ்ஸாம் கலவரம்:நீதி விசாரணைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

அஸ்ஸாம் கலவரம்:நீதி விசாரணைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வகுப்புவாத கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் தருண் கோகோய் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும், நீதி விசாரணை நடத்தவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடு, பணமும் இழந்தவர்களுக்கு அவசர நிவாரண உதவி வழங்கவேண்டும். பல்லாயிரக்கணக்கானோர் கலவரத்திற்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களது புனர்வாழ்வுக்கான பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் கோகோய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டீஸ்டா ஸெடல்வாட், ஜாவேத் ஆனந்த், டாக்டர்.அஸ்கர் அலி எஞ்சீனியர், ராம்புன்யானி, இர்ஃபான் எஞ்சீனியர், ஸஃபர் ஆகா, ராஜேந்திர பிரசாத்(ஸஹ்மத்), ஹஸன் கமால் ஆகியோர் அஸ்ஸாம் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Reply

Top