You are here
Home > Uncategorized > இந்தியா > 2014 தேர்தலில் வெற்றிபெற​ பொய்யான​ வாக்குறுதிகள் அளித்தோம்: மத்திய​ அமைச்சர் கட்காரி

2014 தேர்தலில் வெற்றிபெற​ பொய்யான​ வாக்குறுதிகள் அளித்தோம்: மத்திய​ அமைச்சர் கட்காரி

தேர்தலில் வெற்றிபெற​ பொய்யான​ வாக்குறுதிகளை பிஜேபி அளித்ததாகவும், தேர்தலில் வெற்றிபெற்ற​ பிறகு தற்போது அவ்வாக்குறுதிகளை நிறைவேற்ற​ எந்த​ஒரு திட்டமும் இல்லை என​ மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மராட்டிய​ நேரடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
“நாங்கள் வெற்றிபெறுவோம் என​ நினைக்கவில்லை. ஆகவே பெரிய​ பெரிய​ வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவிக்குமாறு கூறப்பட்டோம். தற்போது ஆட்சியிலிருக்கும்போது மக்கள் அவற்றை பற்றி நினைவுபடுத்துகிறார்கள். ஆனால் தற்போது நாங்கள் அவற்றை கேட்கும்போது சிரிப்பு வருகிறது.”

முன்னதாக​, மோடி ஆட்சியிலுள்ள​ அமைச்சர்கள் பொருளாதாரத்தை பற்றி தெரியாதவர்கள் என​ சொந்த​ கட்சியினரயே சுப்ரமணிய​ சாமி சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

One thought on “2014 தேர்தலில் வெற்றிபெற​ பொய்யான​ வாக்குறுதிகள் அளித்தோம்: மத்திய​ அமைச்சர் கட்காரி

Leave a Reply

Top