You are here
Home > Uncategorized > 2012-13-ம் ஆண்டுக்கான மத்திய நிதி பட்ஜெட் இன்று தாக்கல்

2012-13-ம் ஆண்டுக்கான மத்திய நிதி பட்ஜெட் இன்று தாக்கல்

டெல்லி: 2012-13ம் ஆண்டுக்கான மத்திய நிதி பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். வரிகளை உயர்த்தியும் மானியங்களைக் குறைத்தும் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியாக இந்த பட்ஜெட் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பு
இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது  ரூ. 1.8 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் வாங்கும் சம்பளத்துக்குத் தான் வரி விதிக்கப்படுகிறது.

அதே போல ஆண்டு வருமான வரியிலும் வரி விலக்கு வரம்பு சிறிதளவு அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கார்கள் மீது வரி

இந்த பட்ஜெட்டில் உயர் ரக கார்களுக்கு வரி உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இதனால் அந்தரக கார்கள் விலை உயரும்.

மத்திய அரசின் வருவாயானது செலவைவிட எப்போதும் குறைவாகத்தான் இருந்து வருகிறது. இந்த முறை இந்த பற்றாக்குறை அரசு நிர்ணயித்த இலக்கைவிட அதிகமாகிவிட்டது.

புதிய பட்ஜெட்டால் பெரிய சாதனைகளைச் செய்துவிட முடியாது என்றாலும் ‘வளர்ச்சிக்கான பட்ஜெட்’ என்ற பெயரில் மக்களை (வாக்குகளைக) கவரும் கவர்ச்சி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியைக் கொண்டு இந்த பட்ஜெட் அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யாரை கண்டு பயமோ இல்லையோ மம்தாவை நினைத்து பயம் கொள்கிறது மத்திய அரசு. ரெயில் கட்டணத்தை உயர்த்திய தனது கட்சி அமைச்சரையே தூக்கி வீசியவர் மம்தா. ஆகையால் மத்திய அரசு மிகுத்த எச்சரிக்கையோடு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top