You are here
Home > Uncategorized > 2 லட்சம் கோடி வக்ஃப் ஊழலை கர்நாடகா அரசு விசாரிக்க வேண்டும் – சல்மான் குர்ஷித்

2 லட்சம் கோடி வக்ஃப் ஊழலை கர்நாடகா அரசு விசாரிக்க வேண்டும் – சல்மான் குர்ஷித்

புதுடெல்லி:கர்நாடக மாநிலத்தில் தற்போது வெளிவந்திருக்கும் வக்ஃப் ஊழல் மாநில அளவிலான பிரச்னை என்றும் அந்த பிரச்சனைக்கான முடிவை மாநில அரசே எடுக்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மைத் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாநில அரசு விரும்பினால் மத்திய அரசிடம் இந்த பிரச்சனையைக் கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளமன்றத்தின் வெளியே நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் மாநில அரசே இந்த பிரச்சனை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.

கர்நாடக மாநிலத்தில் வக்ஃப் சொத்தில் 2  லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதைக் குறித்த அறிக்கையை மாநில சிறுபான்மைக் கமிஷனின் தலைவர் அன்வர் மணிப்பாடி முதலமைச்சர் சதானந்தா கவுடாவிடம் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து மத்திய சிறுபான்மைத் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கேட்கப்பட்டதற்கு தங்களுக்கு இந்த அறிக்கை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் வக்ஃப் போர்டிற்கு மத்திய அளவிலான குழு எதுவும் இல்லை என்றும் சிறுபான்மைத் துறைக்கு வக்ஃப் சொத்துக்களை கண்காணிக்கும் பொறுப்பும், திறனும் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Top