You are here
Home > Uncategorized > +2 தேர்வு முடிவுகள்-தேர்ச்சி விகிதம் 85.9%

+2 தேர்வு முடிவுகள்-தேர்ச்சி விகிதம் 85.9%

பிளஸ் 2 தேர்வு முடிவு காண

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5,477 பள்ளிகளில் பயின்ற ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

இத்துடன் தனித்தேர்வர்கள் 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1890 மையங்களில் தேர்வுகள் நடந்தன. இத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

மாநிலத்தில் முதலிடத்தை ஓசூர் விஜய் வித்யாலாயா பள்ளி மாணவி ரேகா 1200க்கு 1190 மார்க்குகள் பெற்று பிடித்துள்ளார். 2வது இடத்தை கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன் வேல் முருகன் 1200க்கு 1187 மதிப்பெண்கள் பெற்று பிடித்துள்ளார். 3வது இடத்தை 4 பேர் பிடித்துள்ளனர்.

மொத்த தேர்ச்சி விகிதம் 85.9 %: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 85.9 சதவீதமாகும். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த‌ ஆண்டு தேர்ச்சி விகிதம் – 85.2 சதவீதம்.

கணித பாடம்: கணித பாடத்தில் 2720 பேர் 200க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதப் பாடம் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் கணித பாடத்தில் 1762 ‌பேர் மட்டுமே 200 மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 2720 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடம்: இயற்பியல் பாடத்தில் 646 மாணவ, மாணவிகள் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடம்: வேதியியல் பாடத்தில் 1243 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

உயிரியல் பாடம்: உயிரியல் பாடத்தில் 615 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

விலங்கியல் பாடம்: விலங்கியல் பாடத்தில் இந்த ஆண்டு ஒருவர் கூட 200க்கு 200 மார்க்கு பெறவில்லை.

தாவரவியல் பாடம்: தாவரவியல் பாடத்தில் 4 பேர் மட்டும் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்: கம்ப்யூட்டர் சயின்ஸ் 223 பாடத்தில் பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Top