You are here
Home > Uncategorized > இந்தியா > 175 காவல்துறை காவல் அதிகாரிகள் பணியில் இருந்து பணி நீக்கம்!

175 காவல்துறை காவல் அதிகாரிகள் பணியில் இருந்து பணி நீக்கம்!

பிஹார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் சவிதா பதக் என்ற பெண் காவலாளி பணியாற்றி வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் விடுப்பு கோரி உயரதிகாரிகளிடம் விண்ணப்பித்தார். ஆனால் அவரது விடுப்பு நிராகரிக்கப்பட்டது.

இதனால் அவரது உடல்நிலை மோசமானது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 2-ம் தேதி உயிரிழந்தார். இதை கண்டித்து போலீஸாரில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் உயரதிகாரிகளின் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.இந்தப் பின்னணியில் வன்முறையில் ஈடுபட்டதாக 175 காவல்துறையினரை பிஹார் காவல் துறையின் ஐஜிபி கான் நேற்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

23 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 93 போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பிஹார் போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, பிஹாரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 900 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 300 பேர் பெண்கள். பெண் காவலாளியின் மரணம் காரணமாக இவர்கள் வன்முறையில் இறங்கினர். இதன்காரணமாக பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Top