சிரியா:27 இளைஞர்கள் படுகொலை

Anti-Assad regime demonstrators attend funeral near northern province of Idlib

அம்மான்:பஸ்ஸாருல் ஆஸாத் அரசின் அட்டூழியம் தீவிரமடைந்துள்ள சிரியாவில் வட பகுதி கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 27 இளைஞர்கள் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவமும், ஆயுதமேந்திய அரசு ஆதரவாளர்களும் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதினா, இப்லின், பால்சன் இத்லிப் ஆகிய கிராமங்களில் தாக்குதல் நடந்துள்ளது. நெஞ்சில் குண்டு பாய்ந்து பெரும்பாலான இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். ஹிம்ஸ் நகரத்தில் அரசு படை தாக்குதலை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வலுவடைந்துள்ள மோதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நகரத்தில் 15 மணிநேரம் மின்சாரம் தடைச் செய்யப்பட்டுள்ளது. ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து விநியோகம் சீர்குலைந்துள்ளது. அதேவேளையில், சிரியாவின் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர துனீசியாவின் தலைநகரான துனீசில் நாளை சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.

அரபு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று இம்மாநாட்டை நடத்துகிறது. ஆனால், இம்மாநாட்டில் பங்கேற்கமாட்டோம் என்று ரஷ்யாவும், சீனாவும் அறிவித்துள்ளன.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Comments Off

Categories உலகம், செய்திகள் | Tags:

Comments are closed.