சிரியா:2 பத்திரிகையாளர்கள் படுகொலை

Marie Colvin, left, an American reporter working for The Sunday Times of London, and Rémi Ochlik, a French photographer, were killed in Syria

டமாஸ்கஸ்:சிரியா ராணுவத்தின் குண்டுவீச்சில் 2 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.

மத்திய நகரமான ஹும்ஸில் பாபு அம்ர் மாவட்டத்தில் பிரிட்டீஷ் பத்திரிகையான சண்டே டைம்ஸின் ரிப்போர்ட்டரான மேரி கோவினும், பிரான்சு நாட்டு பத்திரிகையில் ஃபோட்டோ க்ராஃபராக பணியாற்றும் ரெமி ஒச்லிகும் கொலைச் செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் ஆவர்.

கோவின் அமெரிக்காவைச் சார்ந்தவர். ஒச்லிக் பிரெஞ்சு குடிமகன் ஆவார்.

பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த தற்காலிக வசிப்பிடத்தின் மீது நடத்திய தாக்குதலில் 2 பேரும் கொல்லப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான பத்திரிகையாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹும்ஸில் பல பகுதிகளிலிருந்தும் சிரியா ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

One Response to “சிரியா:2 பத்திரிகையாளர்கள் படுகொலை”

  1. MZ Mohamed Ismail says:

    இலங்கையில் ஒரு கண்ணை இழந்த துணிச்சல் மிக்க செய்தியாளர் மேரி கொல்வின் கொலை
    [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:54.28 PM GMT ]

    இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது செய்திகளைச் சேகரிப்பதில் களமுனை அனுபவத்தைக் கொண்டிருந்தவரும், உலகப் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளர் மேரி கொல்வின் (Marie Colvin) சிரியாவில் இடம்பெறும் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த வேளை எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார்.
    2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற மோதலில் மேரி கொல்வின் தனது கண்களில் ஒன்றை இழந்தார்.
    Source: tamilwin