ஓரினச் சேர்க்கை:மத்திய உள்துறை அமைச்சகம் பல்டி!

ஓரினச் சேர்க்கை

புதுடெல்லி:இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் அவசர கதியில் அறிக்கையொன்றை வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கை தவறல்ல எனறு கடந்த 2009-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மேலும் இது இயற்கைக்கும் முரணானதாகும்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம் மற்ற கலாச்சாரங்களை விட மாறுபட்டது. எனவே, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடிசனல் சோலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் அளித்தார். ஆனால் இதுக்குறித்த செய்திகள் வெளியான உடனே மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் கேபினடின் பரிசீலனையில் இருப்பதாகவும், உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அப்பீல் அளிக்க முடிவாகவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

2 Responses to “ஓரினச் சேர்க்கை:மத்திய உள்துறை அமைச்சகம் பல்டி!”

  1. கீழக்கரையான் says:

    ஒரு சமூதாயமே அளிக்கப்பட்ட வரலாறு இதற்க்கு உண்டு ,இறைவன் விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் கொடுத்தது உடல் உறவுக்கும் சேர்த்துத்தான் ..ஏனென்றால் . விலங்குகள் கூட செய்யாத ஒரு ஈனட்ச்செயலை மனிதன் செய்வதற்கு அனுமதி என்றால் அனுமதி கொடுத்தவர் அந்த இத்சைக்கு உட்பட்டவராகவே இருப்பார் ..ஆணுக்கு,பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இறைவன் கொடுத்தது தாம்பத்திய உறவில் இருவரும் ஒருவரை ஒருவர் ரசிப்பதிலும் இன்பம் கிடைக்குமென்றுதான் ,,ஆனால் இந்த ஈனச் செயலில் ஈடுபடுபவரின் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிவதற்கு இல்லை ..எனவே இந்தசெயலில் ஈட்பட்டவர்கள் இருவருக்கும் மரணதண்டனை இந்திய அரசு கொடுக்குமென்றால் அது உலக அளவில் மிகவும் வரவேற்ப்பு ஏற்படும் ..பாலியல் நோய் இல்லாத நாடாக இந்தியா உருவாகும் ..

  2. இந்தியன் ராஜா says:

    ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மேலும் இது இயற்கைக்கும் முரணானதாகும்.

    இயற்கைக்கு முரணான இந்த ஈனச்செயலை செய்பவர்கள் மனிதர்கள் அல்ல , விலங்குகள். இவர்களை இல்லை இந்தக் கழிசடைகளை ஜூவில் தான் வாழவிடவேண்டும் /

    இந்த அறிவீனர்கள் போல இந்த மூடர்களைப் பெற்றெடுத்த மூதாதையர்களும் செய்திருந்தால் இவர்கள் இந்த உலகத்தை எப்படிப் பார்த்திருப்பார்கள் / மனித இனமே அழிந்து போய்விடுமே !