உ.பி:இன்று 5-வது கட்ட வாக்குப்பதிவு!

up

லக்னோ:உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. 13 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கான்பூர், கான்ஷிராம் நகர், எடா, ஜான்ஸி, லலித்பூர், ஹமீர்பூர், மஹோபா, பிரோஸôபாத், மெயின்புரி, ராமாபாய் நகர், ஆராய்யா, ஜலான், எடாவா ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் இந்தக் கட்டத்தில் தேர்தலை சந்திக்கவுள்ளன. மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கிய புந்தேல்கண்ட் பகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

829 வேட்பாளர்கள்: 5-ம் கட்டத் தேர்தலில் 87 பெண் வேட்பாளர்கள் உள்பட 829 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலத்தை ஆளும் பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா, சமாஜவாதி ஆகிய மூன்று முக்கிய கட்சிகளும் 49 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் 48 தொகுதிகளில் போட்டியிடுகிறது. துந்த்லா தொகுதியை மட்டும் தனது கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக தளத்துக்கு விட்டுக்கொடுத்துள்ளது

1.56 கோடி வாக்காளர்கள்:
மொத்தம் 1.56 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். 49 தொகுதிகளிலும் 16781 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பர் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்டமாகத் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்தது. இதில் ஏற்கெனவே 4 கட்டத் தேர்தல் முடிவடைந்துவிட்டது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

One Response to “உ.பி:இன்று 5-வது கட்ட வாக்குப்பதிவு!”

  1. மதறாசி says:

    : 5-ம் கட்டத் தேர்தலில் 87 பெண் வேட்பாளர்கள் உள்பட 829 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலத்தை ஆளும் பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா, சமாஜவாதி ஆகிய மூன்று முக்கிய கட்சிகளும் 49 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் 48 தொகுதிகளில் போட்டியிடுகிறது. துந்த்லா தொகுதியை மட்டும் தனது கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக தளத்துக்கு விட்டுக்கொடுத்துள்ளது