ஆயுதம் ஏந்தியவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை – லிபியா!

Mustafa Abdul Jalil, the chairman of Libya's National Transitional Council

திரிபோலி:லிபியாவில் ஆயுதம் ஏந்தியவர்களை கட்டுப்படுத்த இயலவில்லை என்று அரசுக்கு தலைமை வகிக்கும் தேசிய மாற்றத்திற்கான கவுன்சில்(என்.டி.சி) தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் கூறியுள்ளார்.

கத்தாஃபியை ஆட்சியில் இருந்து அகற்ற ஆயுதமேந்திய மக்களில் பெரும்பாலோர் ஆயுதங்களை ஒப்படைக்க கோரும் அரசின் முடிவுக்கு கட்டுப்படவில்லை. கத்தாஃபியின் ஆதரவாளர்கள் தற்போதும் அச்சுறுத்தலாகவே உள்ளனர் என்று அசோசியேட் ப்ரஸ்ஸிற்கு அளித்த பேட்டியில் அப்துல் ஜலீல் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது: நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க புதிய தலைவர்களுக்கு பல வருடங்கள் தேவைப்படும். கத்தாஃபிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அரசுக்கு எதிராக பல உள்ளூர் நிர்வாகங்கள் செயல்படுகின்றன. போராளி குழுக்களை உருவாக்கும் முன்னாள் எதிர்ப்பாளர்களின் முயற்சி பாதகமாக மாறும். என்.டி.சி அரசுக்கு பல காரியங்களிலும் தவறு நேர்ந்துள்ளது. இவ்வாறு அப்துல் ஜலீல் கூறினார்.

அதேவேளையில், தென்கிழக்கு லிபியாவில் பாலைவனத்தில் இரண்டு பழங்குடி குழுக்கள் இடையே பல வாரங்களாக தொடரும் மோதலில் 113 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கத்தாஃபி யுகத்திற்கு பிறகு எண்ணெய் வளமிக்க நாடான லிபியா வன்முறையை நோக்கி நகருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மக்களின் நம்பிக்கையை பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 1500 டாலர் வீதம் ஒவ்வொரு மாதம் அளிப்பதாக அரசு அறிவித்திருந்தது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Comments Off

Categories உலகம், செய்திகள் | Tags:

Comments are closed.