You are here
Home > இஸ்லாம் > “ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” – நூல் விமர்சனம்

“ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” – நூல் விமர்சனம்

நூலின் பெயர் : “ஹமாஸ் இயக்க முன்னோடி

காலித் மிஷ்அல்”

ஆசிரியர்:   B. ரியாஸ் அஹமது MBA

வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம்

பக்கங்கள்: 152

விலை: 100/-

ஃபலஸ்தீனில் நயவஞ்சகத்தனமாக நுழைந்து, குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து, 1948ல் அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினர் நயவஞ்சக யூதர்கள். உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுத்தது எனலாம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் அதிர்ச்சியடையச் செய்தது.

யூதர்களின் குறுமதியால் ஃபலஸ்தீன மக்கள் கைசேதப்பட்டு நின்றார்கள். தொடர்ந்து யூதர்கள் தங்களுடைய கொடூரங்களை நிகழ்த்தி பெண்களையும், குழந்தைகளையும், முதியோர்களையும் கொன்று குவித்தனர். முழு ஃபலஸ்தீனையும் கைப்பற்றி விடுவோம் என்று சூளுரைத்தனர். ஃபலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க புறப்பட்டதுதான் எழுச்சிமிகு ஹமாஸ் இயக்கம்.

யூதர்கள் ஃபலஸ்தீன மண்ணை விட்டு ஓடும் வரை, எங்களுடைய போராட்டம் தொடரும் என அறிவித்தது ஹமாஸ். முதல் இன்திஃபாழாவை (மக்கள் எழுச்சி) தொடங்கியது ஹமாஸ். இந்த எழுச்சி, இஸ்ரேலிய இராணுவத்தை பின்னங்கால் பிடறியடிக்க ஓடச் செய்தது. அப்பொழுதுதான் இவர்கள் ஹமாஸைப் பற்றி புரிந்து கொண்டார்கள்.

ஹமாஸ் இருக்கும் வரை, நம்முடைய கனவு நிறைவேறாது என்பதை இஸ்ரேலியர்கள் உணர்ந்தனர். அதனால், ஹமாஸ் இயக்கத்தை அழிக்க முற்பட்டனர். இதில்தான், ஷேக் அஹ்மது யாசீன், யஹ்யா அய்யாஷ், அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி போன்ற ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத் கொலை செய்தது.

இவர்களின் இறப்புகள் ஃபலஸ்தீனில் எழுச்சியைத்தான் ஏற்படுத்தியதே தவிர, மக்களிடம் எந்தவித சோர்வையும் ஏற்படுத்தவில்லை.

இதில் முக்கியமானவரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவருமான காலித் மிஷ்அல் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிறார். இவரைக் கொல்வதற்கு மொஸாத் செய்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின. இதைப் பற்றிய முழுமையான தகவல்களுடனும், காலித் மிஷ்அலின் ஆளுமையைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்தான் “ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” என்ற புத்தகம்.

நவீன காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகனிடமும், இஸ்ரேலியர்களின் சூழ்ச்சிகளை பொதுத் தளத்திலிருந்து தோலுரித்துக் காட்டுபவர்களிடமும் இருக்க வேண்டிய புத்தகம் இது.

இதை அழகிய நடையில் எழுதியுள்ள ரியாஸ் அஹமது அவர்களுக்கும், வெளியிட்டுள்ள இலக்கியச்சோலை பதிப்பகத்துக்கும் நம்முடைய பாராட்டுக்கள். மேலும், இதுபோன்ற தற்கால நிகழ்வுகளைப் பற்றி எடுத்துரைக்கும் நூல்களை தொடர்ந்து இலக்கியச்சோலை வெளியிட வேண்டும்.

நெல்லை சலீம்

Leave a Reply

Top