You are here
Home > Uncategorized > ஹெட்லியுடன் தொடர்பு-சிவசேனா ஒப்புதல்

ஹெட்லியுடன் தொடர்பு-சிவசேனா ஒப்புதல்

மும்பை:மும்பை தீவிரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியாக கருதப்படும் அமெரிக்க குடிமகனும், எஃப்.பி.ஐயின் ஏஜண்டாக கருதப்படும் டேவிட் கோல்மான் ஹெட்லியுடன் பல தடவை தொடர்பு கொண்டதாக சிவசேனா ஒப்புக் கொண்டுள்ளது. ஹெட்லி தீவிரவாதி என தெரியாமல் அவருடன் தொடர்பு கொண்டதாக சிவசேனாவின் தலைவர் ராஜாராம் ரெகே தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரேயை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் இதற்காக சிவசேனாவின் பி.ஆர்.ஒ ராஜாராம் ரெகே என்பவருடன் தொடர்பு கொண்டதாகவும் மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் அமெரிக்காவின் ஷிகாகோ நீதிமன்றத்தில் ஹெட்லி நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ராஜாராம் ரெக்கி என்ற பெயரில் தங்களது கட்சியில் பி.ஆர்.ஓ யாரும் இல்லை என்று சிவசேனா தெரிவித்திருந்தது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராத் கூறுகையில், எங்களது கட்சியில் ராஜாராம் ரெக்கி என்ற பெயரில் உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். ஆனால் இந்தப் பெயரில் பி.ஆர்.ஓ யாரும் இல்லை என்றார்.

ஹெட்லியுடன் இணயதளம் உள்பட பல்வேறு வழிகளில் ஹெட்லியை தொடர்பு கொண்டதை ஒப்புக்கொண்ட ரெகே விலாஸ் வார்கார்வி என்பவர் மூலமாக ஹெட்லிக்கு அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முன்னர் கம்ப்யூட்டர் பொறியாளரான ரெகேவிடம் விசாரணை நடத்தியிருந்தது. இதற்கிடையே டெல்லி தேசிய பாதுகாப்பு கல்லூரியை தாக்க திட்டமிட்டிருந்ததாக ஹெட்லி வாக்குமூலம் அளித்தார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Top