You are here
Home > Uncategorized > ஹெட்லியின் வாக்குமூலம்:புதிதாக ஒன்றுமில்லை-மன்மோகன்சிங்

ஹெட்லியின் வாக்குமூலம்:புதிதாக ஒன்றுமில்லை-மன்மோகன்சிங்

புதுடெல்லி:மும்பை தாக்குதலுக்கு சூத்திரதாரி என கருதப்படும் டேவிட் கோல்மான் ஹெட்லி ஷிகாகோ நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் புதுமை ஒன்றுமில்லை என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து புதுடெல்லி திரும்பிய பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மும்பை தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு பங்குள்ளது குறித்து இந்தியாவுக்கு ஏற்கனவே தெரியும். நாட்டின் உள்ளே செயல்படும் நாசகார சக்திகளை கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு இயலவேண்டும். பாகிஸ்தானுடனான சமாதான பேச்சுவார்த்தை தொடரும்.-இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top