You are here
Home > Uncategorized > ஹவாலா:கிலானிக்கு தொடர்பில்லை என டெல்லி போலீஸ்

ஹவாலா:கிலானிக்கு தொடர்பில்லை என டெல்லி போலீஸ்

புதுடெல்லி:ஹவாலா இடைத் தரகர்களுடன் தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானிக்கு தொடர்பில்லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக அவரை விசாரித்திருந்த போதிலும் ஆதாரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் டெல்லியில் நான்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் உறுப்பினர்களை 21.2 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன் கைது செய்ததாக டெல்லி போலீஸ் கூறியது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஹவாலா பணம் கிலானிக்கு சொந்தமானது எனத் தெரிவித்ததாக போலீஸ் கூறியது. இதனைத் தொடர்ந்து கிலானியிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது கிலானி ஹவாலா இடைத் தரகர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்ததாக போலீஸ் கூறுகிறது.

இதுத் தொடர்பான சுதந்திர விசாரணையிலும் கிலானிக்கு தொடர்பில்லை என்பது நிரூபணமாகியது. இச்சம்பவம் நடக்கும் பொழுது கிலானி டெல்லியில் சிகிட்சைப் பெற்றுவந்தார்.

ஹவாலா பணம் கிலானிக்கு சொந்தமானது என்றாலும் கூட, ஹுர்ரியத் தடைச் செய்யப்படாத அமைப்பு என்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவியலாது என டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை நடத்த கிலானியை அழைக்கமாட்டோம் என தெரிவித்த அவர், கூடுதல் விசாரணைக்காக கஷ்மீருக்கு ஒரு குழுவை அனுப்பப் போவதாகவும், இவ்வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரை தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Top