You are here
Home > Uncategorized > ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஜெயலலிதாவின் எலக்ட்ரிக் கார்

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஜெயலலிதாவின் எலக்ட்ரிக் கார்

சென்னை:குருவாயூருக்கு யானை கொடுத்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. தற்பொழுது தமிழக முதல்வராக பதவி வகிக்கும் ஜெயலலிதா தான் போட்டியிட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மின்சார கார் ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளார்.

ஐந்துபேர் பயணிக்கும் இக்காரின் விலை 4.5 லட்சம் ரூபாயாகும்.இதனை அவர் தனது சொந்த செலவிலேயா வாங்கி அளித்துள்ளார். ஆனால், பத்துபேர் பயணிக்கும் ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்னொரு காரை அவர் மக்கள் வரிப்பணத்தில் வாங்கி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அளித்துள்ளார். தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூற திருச்சிக்கு வந்த அவர் மூன்று தினங்கள் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வார்.

Leave a Reply

Top