You are here
Home > Uncategorized > இந்தியா > ஸ்டாலின் டி.டி.வி.தினகரனோடு மறைமுக கூட்டணியா!

ஸ்டாலின் டி.டி.வி.தினகரனோடு மறைமுக கூட்டணியா!

சென்னையில் செய்தியார்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயக்குமார் மதுரையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலினும், தினகரனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள் என்றும் இருவரும் ஒரே விடுதியில் தங்குவதற்கு முன்பு வரை 18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்யலாம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அதன் பின்னர், இருவரும் இடைத் தேர்தலை எதிர் கொள்ள விரும்புவதாக கூறியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ஆனால் இதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்தார்.

இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது “இரு வேறுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஒரே விமானத்தில் பயணிக்ககூடாதா, ஒரே விடுதியில் தங்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கமாக ஸ்டாலின் தங்கும் நட்சத்திர விடுதியில் அறைகள் காலியாக இல்லாத காரணத்தால் டிடிவி தினகரன் தங்கியிருந்த விடுதியில் ஸ்டாலின் தங்கும் நிலை ஏற்பட்டது என்றும் கூறினார்.

இதன் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தார் என்று அதிமுக அமைச்சர் உதயகேகுமார் குற்றம் சுமத்தியதற்கு மறுப்பு தெரிவித்தார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

 

Leave a Reply

Top